Skip to main content

அடில் ரஷீத் படைத்த விநோத சாதனை!

Published on 13/08/2018 | Edited on 13/08/2018

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி மோசமாக தோற்றிருக்கிறது. இந்திய அணியின் பேட்டிங் லைன்-அப்பை இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் துவம்சம் செய்திருக்கின்றனர். எங்களது மிக மோசமான ஆட்டம் இது என்பதால், சூழலைக் காரணம்காட்டி தப்பிக்கப் போவதில்லை என கேப்டன் விராட் கோலி கூறியிருக்கிறார். 
 

Rashid

 

 

 

முதல் டெஸ்ட் போட்டியில் முக்கியமான தருணங்களில் சொதப்பிய மாலனுக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட ஓல்லி போப், மிகச்சிறப்பாக விளையாடினார். அதேபோல், பென் ஸ்டோக்ஸுக்கு பதிலாக களமிறங்கிய கிறிஸ் வோக்ஸ், சற்றும் எதிர்பார்க்காத வண்ணம் சதமடித்து அசத்தியதோடு, முக்கியமான விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். 
 

ஆனால், இவர்களுக்கெல்லாம் கிடைக்காத புகழ், அணியில் ஒன்றும் செய்யாமல் சும்மா இருந்த அடில் ரஷீத்திற்குக் கிடைத்திருக்கிறது. ஆம், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஒரு பந்தைக் கூட எதிர்கொள்ளாமல், ஒரு பந்துகூட வீசாமல் இருந்திருக்கிறார். அது மட்டுமின்றி, ஒரு கேட்சோ, ரன்-அவுட்டோ எடுக்கவில்லை. கிரிக்கெட் வரலாற்றில் இந்த சாதனையை நிகழ்த்தும் 14-ஆவது வீரர் மற்றும் கடந்த 13 ஆண்டுகளில் இந்த சாதனையை நிகழ்த்தும் முதல் இங்கிலாந்து வீரர் அடில் ரஷீத் என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்றுமே செய்யாமல் சும்மா அணியில் இருந்தமைக்கு அவருக்கு வழங்கிய ஊதியம் மட்டும் ரூ.10 லட்சம்!

 

 

ஏற்கெனவே, மொயீன் அலிக்கு பதிலாக அடில் ரஷீத்தை அணியில் சேர்த்தது விமர்சனத்திற்குள்ளானது. தற்போது, இப்படியொரு புதிய சாதனையை ரஷீத் படைத்திருப்பது மேலும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.