Published on 25/10/2021 | Edited on 25/10/2021

ஐபிஎல் தொடரில் தற்போது 8 அணிகள் பங்கேற்றுவரும் நிலையில், அடுத்த ஐபிஎல் தொடரிலிருந்து 10 அணிகள் பங்கேற்கும் என பிசிசிஐ ஏற்கனவே அறிவித்ததோடு, புதிய அணிகளை வாங்குவதற்கு டெண்டர்களை வரவேற்று அறிவிப்பை வெளியிட்டது.
அதனைத்தொடர்ந்து புதிய அணிகளை வாங்குவதற்கான ஏலம் இன்று (25.10.2021) நடைபெற்றது. இதில் அதானி குழுமம், ஹிந்துஸ்தான் டைம்ஸ் மீடியா, ஜிண்டால் ஸ்டீல் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் கலந்துகொண்டன.
இந்நிலையில், அகமதாபாத் அணியை அதானி குழுமம் வாங்கியுள்ளதாகவும், இந்தூர் அணியை மான்செஸ்டர் யுனைடெட் வாங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், ஐபிஎல் அணிகளை வாங்கியுள்ளது யார் யார் என்பதை இந்திய கிரிக்கெட் வாரியம் சற்று நேரத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளது.