Skip to main content

5 ஆவது முறையாக கோப்பையை உச்சிமுகர்ந்த சென்னை அணி

Published on 30/05/2023 | Edited on 30/05/2023

 

5th time; The Chennai team topped the trophy

 

16 ஆவது ஐபிஎல் போட்டியில் சென்னை - குஜராத் அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி நேற்று முன்தினம் மழை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் 47 பந்துகளுக்கு 96 ரன்களை எடுத்தார். விருத்திமான் சஹா 54 ரன்களை எடுத்தார்.

 

பின்னர் 215 ரன்கள் இலக்காக வைத்து களத்தில் இறங்கிய சென்னை அணி, மூன்று பந்துகளில் நான்கு ரன்கள் எடுத்திருந்த நிலையில் திடீரென மழை பொழிந்தது. இதனால் போட்டியானது நிறுத்தப்பட்டது.  மீண்டும் போட்டியானது நள்ளிரவு 12.10 மணிக்கு தொடரும் என்றும் டிஎல்எஸ் விதிப்படி போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு 171 ரன்கள் சென்னை அணிக்கு இலக்கு கொடுக்கப்பட்டது. தொடர்ந்து களத்தில் இறங்கிய சென்னை அணி 15 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 171 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. கான்வே 47 ரன்களையும் ஷிவம் துவே 32 ரன்களையும் ரஹானே 27 ரன்களையும் எடுத்தனர். இறுதி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அடுத்தடுத்து சிக்ஸர், பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார் ஜெடேஜா. குஜராத் சார்பில் மோகித் 3 விக்கெட்களையும் நூர் அஹமத் 2 விக்கெட்களையும் எடுத்தனர். 

 

ஐபிஎல் ப்ளே ஆஃப் போட்டிகளில் தேசிய அணிக்காக விளையாடாத வீரர்களில் இரண்டாவது அதிகபட்ச ரன்களை எடுத்தவர் என்ற பெருமையை சாய் சுதர்சன் பெற்றார். முதலிடத்தை ரஜத் பிடித்தார். பெங்களூர் அணிக்காக கடந்த ஆண்டு எலிமினேட்டர் போட்டியில் சதமடித்து முதலிடத்தில் உள்ளார். ஐபிஎல் இறுதிப் போட்டியில் அதிக ரன்களை கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையை துஷார் தேஷ்பாண்டே படைத்தார். நேற்றைய போட்டியில் இவர் 56 ரன்களை விட்டுக்கொடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் ஷேன் வாட்சன் 2016 ஆம் ஆண்டு ஆர்.சி.பி அணிக்காக விளையாடும் போது ஹைதராபாத் அணிக்கு எதிராக 61 ரன்களை விட்டுக்கொடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. 

 

ஐபிஎல் தொடர்களில் அதிக ரன்களை சேர்த்த இணை என்ற வரிசையில் ருதுராஜ் மற்றும் டெவான் கான்வே இணை இணைந்தது. நடப்பு சீசனில் இவர்கள் 849 ரன்களை குவித்து 3 ஆவது இடத்தில் உள்ளனர். முதலிடத்தை 939 ரன்களுடன் விராட் மற்றும் டிவில்லியர்ஸ் (2016) இணையும் அதே 939 ரன்களுடன் நடப்பு சீசனில் விராட் மற்றும் டுப்ளசிஸ் (2023) இணையும் உள்ளது.

 

 

Next Story

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
New captain appointed for Chennai Super Kings team

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் 17 ஆவது சீசன் இந்த ஆண்டு (2024) மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி நாளை (22.03.2024) முதல் ஐ.பி.எல். தொடர் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 7 ஆம் தேதி வரை 21 போட்டிகள் முதற்கட்டமாக நடைபெறவுள்ளன.

அந்த வகையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி - பெங்களூரு அணியுடன் மோதுகிறது. 9வது முறையாக ஐ.பி.எல். சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்குகிறது. மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி 2 ஆம் கட்ட அட்டவணை விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

New captain appointed for Chennai Super Kings team

இந்நிலையில் ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணிக்காக இதுவரை 5 சாம்பியன் கோப்பைகளை பெற்று கொடுத்த தோனி தனது கேப்டன் பொறுப்பை விட்டுக் கொடுத்துள்ளார். ஐபிஎல் - 2024 கோப்பையுடன் அனைத்து அணிகளின் கேப்டன்களும் நிற்கும் புகைப்படத்தை ஐபிஎல் நிர்வாகம் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் தோனி இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் தோனியின் 13 ஆண்டுகால சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. 

Next Story

ஐ.பி.எல். போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு! 

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
IPL Release of schedule for matches

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் 17 ஆவது சீசன் இந்த ஆண்டு (2024) மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதாவது ஐ.பி.எல். தொடரின் முதல் 17 நாட்களுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி மார்ச் 22 ஆம் தேதி ஐ.பி.எல். தொடர் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 7 ஆம் தேதி வரை   21 போட்டிகள் முதற்கட்டமாக நடைபெறவுள்ளன.

அந்த வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 22 இல் நடைபெறும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி, - பெங்களூரு அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. 9 வது முறையாக ஐ.பி.எல். சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்குகிறது. மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அட்டவணை வெளியான பிறகு 2 ஆம் கட்ட அட்டவணை வெளியாகும் எனக் கூறப்படுகிறது.