Skip to main content

2023 ஐபிஎல்; சிஎஸ்கே அணியில் யார் உள்ளே யார் வெளியே!

Published on 16/11/2022 | Edited on 16/11/2022

 

2023 IPL; Who is in and who is out in the CSK team

 

16 ஆவது ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 23ம் தேதி நடைபெறவுள்ளது. அணியின் நிர்வாகங்கள் தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்களின் பட்டியலை நவம்பர் 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் கூறியிருந்தது. 

 

இந்நிலையில் அனைத்து அணிகளும் தங்களுக்குத் தேவையான வீரர்களை மட்டும் அணியில் வைத்துக்கொண்டு மற்ற வீரர்களை வெளியில் விட்டுள்ளது. 

 

தற்போது சென்னை அணியிலிருந்து 8 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதன் படி ஜெகதீசன், ராபின் உத்தப்பா, கிறிஸ் ஜோர்டன், ஆடம் மில்னே, ஹரி நிஷாந்த், பகத் வர்மா, கே.எஸ்.ஆசிப் உள்ளிட்ட 8 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

 

தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்கள் பட்டியல் தோனி, கான்வே, ருதுராஜ், அம்பத் ராயுடு, சேனாபதி, மொயின் அலி, தூபே, ராஜவர்தன், பிரிடோரியஸ், சாண்ட்னர், ஜடேஜா, துஷார் தேஷ்பாண்டே, முகேஷ் சவுத்ரி, பதிரானா, சிமர்ஜீத் சிங், தீபக் சாஹர், பிரஷாந்த் சோலான்கி, தீக்‌ஷனா போன்ற வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

 

ஆல் ரவுண்டர் ஜடேஜா சென்னை அணியில் நீடிப்பாரா என்ற சந்தேகம் பல மாதங்களாக இருந்து வந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பு நீடிப்பார் என்பதை உறுதி செய்துள்ளது.

 

 

 

Next Story

சேப்பாக்கத்தில் செழுமையான வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
ipl score CSK vs gt ipl latest live score update chennai wins

ஐபிஎல் 2024 7 ஆவது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ருதுராஜ் மற்றும் ரச்சின் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடத் துவங்கினர். கடந்த ஆட்டத்தைப் போலவே பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக விளாசிய ரச்சின் 20 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த ரஹானே 12 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து ஏமாற்றினார். பின்னர் அதிரடி ஆட்டக்காரர் சிவம் துபே களமிறங்கினார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கேப்டன் ருதுராஜ் அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 46 ரன்களில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த டேரில் மிட்சல் ஓரளவு நிதானமாக ஆட, சிவம் துபே சேப்பாக்கம் மைதானத்தில் சிக்ஸர் மழையால் ரசிகர்களை நனைய வைத்தார். 5 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 23 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அதன் பின்னர் டேரில் மிட்சலும் 24 ரன்களுக்கு ஆட்டம் இழக்க, பின்னர் வந்த சமீர் ரிஸ்வி கடைசி கட்டத்தில் அதிரடியாக அடித்த இரண்டு சிக்ஸர்கள் உதவியுடன் 200 ரன்களை கடந்தது. இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. குஜராத் அணி தரப்பில் ரஷித் கான் 2 விக்கெட்டுகளும், சாய் கிஷோர், ஜான்சன், மொஹித் சர்மா ஆகியோ தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி ஆரம்பம் முதலே தடுமாறத் துவங்கியது. அந்த அணியின் கேப்டன் கில் 8 ரன்களில் விரைவிலேயே நடையைக் கட்டினார். அடுத்து வந்த விஜய் சங்கர் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அனுபவ வீரரான சஹாவும் 21 பெரிதாக நிலைக்கவில்லை. பின்னர் இறங்கிய சாய் சுதர்சன் கடந்த ஆட்டத்தைப் போலவே இம்முறையும் பொறுப்பாக ஆடத் தொடங்கினார். அவருடன் சேர்ந்த மில்லர் அதிரடியாக ஆடத் துவங்கினார்.

ஆனால், அவரின் அதிரடி வெகு நேரம் நிலைக்கவில்லை. தேஷ்பாண்டே பந்துவீச்சில் ரஹானேவின் அற்புதமான கேட்சால் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த ஒமர்சாயுடன் இணைந்த சுதர்சன் நிதானமாகவே ஆடி வந்தார். ஆனாலும் தவறான ஷாட்டால் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஒமர்சாயும் 11 ரன்களில் ஆட்டமிழக்க குஜராத் அணி பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது. பின்னர் வந்த ரஷித் 1, டெவாட்டியா 8, என வெளியேற, உமேஷ் 10, ஜான்சன் 5 என 20 ஓவர்களில் குஜராத் அணி 143 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சென்னை அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Next Story

CSK vs GT: சேப்பாக்கத்தை சிலிர்க்க வைத்த சிவம் துபே!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
ipl live score update csk vs gt shivam dube show

ஐபிஎல் 2024 ஏழாவது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ருதுராஜ் மற்றும் ரச்சின் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடத் துவங்கினர். கடந்த ஆட்டத்தைப் போலவே பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக விளாசிய ரச்சின் 20 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த ரஹானே 12 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து ஏமாற்றினார். பின்னர் அதிரடி ஆட்டக்காரர் சிவம் துபே களமிறங்கினார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கேப்டன் ருதுராஜ் அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 46 ரன்களில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த டேரில் மிட்சல் ஓரளவு நிதானமாக ஆட, சிவம் துபே சேப்பாக்கம் மைதானத்தில் சிக்ஸர் மழையால் ரசிகர்களை நனைய வைத்தார். 5 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 23 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அதன் பின்னர் டேரில் மிட்சலும் 24 ரன்களுக்கு ஆட்டம் இழக்க, பின்னர் வந்த சமீர் ரிஸ்வி கடைசி கட்டத்தில் அதிரடியாக அடித்த இரண்டு சிக்ஸர்கள் உதவியுடன் 200 ரன்களை கடந்தது. இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. குஜராத் அணி தரப்பில் ரஷித் கான் 2 விக்கெட்டுகளும், சாய் கிஷோர், ஜான்சன், மொஹித் சர்மா ஆகியோ தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 3.1 ஓவர்களில் 29-1 என்று ஆடி வருகிறது.