நம் நாட்டுக்கே உரிய பாரம்பரிய சிறப்புகள் குடும்ப கட்டமைப்பு மற்றும் உணவு முறைகள். இவை இரண்டுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நம் வீட்டில் வயசான பாட்டி, தாத்தா எல்லாம் இருந்தவரை, எந்த ஒரு வியாதியாக இருந்தாலும் அதை பாதிக்கப்பட்ட நபர் வெளியில் சொல்லும் முன்னரே நோயாளிகளின் செயல்களை வைத்து கணித்து அந்த பாதிப்பில் இருந்து மீட்கும் உணவை அவரிடம் சொல்லாமலே அவருக்கு கொடுத்து மீட்டு விடுவார்கள். சிறு குழந்தைகளுக்கு வசம்புக் காய்களை நூலில் கோர்த்து வளையல் போல கட்டி விடுவார்கள். நாம் குழந்தைகளைத் தூக்கி கொஞ்சும்போது நமது மூச்சுக் காற்றில் உள்ள கிருமிகள் குழந்தைகளை அண்டாது. சில வருடங்களுக்கு முன் வந்த மர்மக் காய்ச்சலை நிலவேம்பு கசாயம் கொண்டே துரத்தி அடித்த வரலாறு நமக்கு உண்டு. உலகில் அதிக எண்ணிக்கையில் வாழ்வது நுண் உயிரிகள் தான். அதற்கு பிறகே தாவரங்கள், கடல் உயிரினங்கள், மனிதன் எல்லாம். பல லட்சம் நுண் உயிரிகள் இருப்பதாக அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதில் வெறும் நூறு உயிரிகளை மட்டும் கண்டு பிடித்து வைத்து அதற்குள் தான் இன்று சுற்றி சுற்றி ஆய்வு செய்து கொண்டு உள்ளனர். அதில் ஒன்றுதான் கொரோனா. இது அங்க சுத்தி இங்க சுத்தி இப்ப நம்ம நாட்டுக்குள்ள வந்துடுச்சு.
எல்லா நுண் உயிரிகளும் அதற்கான தட்ப வெப்ப நிலை, உணவு இதெல்லாம் கிடைக்கும் இடத்தில்தான் வாழும். இன்றைய மருத்துவ உலகில் ஒருவரை நோயாளி என்று அறிவிக்க லேப் -டெஸ்ட் முறைதான் பயன்படுகிறது. லேபில் பெரும்பாலும் மனிதனின் கழிவில் இருந்துதான் ஆய்வு செய்வார்கள். சிறுநீர், மலம் நரம்புகளில் இருந்து எடுக்கப்படும் இரத்த மாதிரிகள். மிக முக்கியமான ஒரு விஷயம் உண்டு. கழிவுகள், கெட்டுப் போனது, குப்பைகள் இதில்தான் நுண் உயிரிகள் வாழும். இயற்கையான பேதி மாத்திரை, விளக்கெண்ணெய் குடித்து குடல் கழிவுகளை நீக்குங்கள். பதப்படுத்தப்பட்ட உணவுகளை அறவே ஒழியுங்கள். துரித உணவுகள் கழிவுகளே. கழிவுகளில் இருந்து எடுக்கப் படும் நுண் உயிரிகளே அதில் சேர்க்கப் படுகிறது. இயற்கையான உணவை உண்ணுங்கள். பசி எடுக்காமல் உணவு உட் கொள்ளாதீர்கள். சேமித்து வைத்த மாமிச வகைகள் நுண் உயிரிகளின் பிறப்பிடம். உணவே மருந்து. இயற்கையே தாய்மை.