பதப்படுத்தப்பட்ட மற்றும் செயற்கை உணவுகள் மூலம் குடல் நுண்ணுயிர்களுக்கு விளையும் பாதிப்பை ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா தரண் விளக்குகிறார்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள், இன்ஸ்டன்ட் உணவுகள் மற்றும் பாக்கெட் உணவுகள் நீண்ட காலம் கெட்டுப்போகாமல் இருப்பதை நாம் எப்போதாவது யோசித்தல்லை. நாம் அனைவரும் முடிந்தவரை பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகளைத் தவிர்த்து, இயற்கையான உணவுகளை உட்கொள்ள வேண்டும். விவசாயிகள் பறித்து நேரடியாக உண்ணும் இயற்கையான காய்கறிகள், நம் உடலில் அதிலுள்ள நுண்ணுயிர்கள் சேர்ந்து கழிவாக மாறுகின்றன அது நிலத்தில் சேர்க்கின்றன. இது ஒரு அழகான உணவு சுழற்சி.
ஆனால், காய்கறிகளுக்கு பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தும்போது, நுண்ணுயிர்கள் கொல்லப்படுகின்றன. இதனால், நமக்கு தேவையான நுண்ணுயிர்கள் கிடைக்காமல் மண்ணிற்கும் தேவையான நுண்ணுயிர்கள் கிடைக்காமல் போகும்போது, அது மலடாகிவிடுகிறது. இதனால், அந்த மண்ணில் அடுத்து விளைந்த காய்கறிகளில் நிறைவான சத்துக்கள் இருப்பதில்லை. இன்றைய ஐவிஎஃப் போன்ற குழந்தையின்மை பிரச்சினைகளுக்கு இதுவும் ஒரு காரணம். குடல் நுண்ணுயிர்களை மேம்படுத்த குழந்தை சுகப்பிரசவம் முதல் , தாய்ப்பால், உள்ளூரில் விளையும் காய்கறிகள், மீன், ஒமேகா 3 மற்றும் தண்ணீர் ஆகியவை தான் உதவும். குழந்தைகளை முடிந்தவரை இயற்கையுடன் விட்டு, மண்ணில் விளையாட விடுவது மற்றும் விலங்குகளுடன் பழக விடுவது நுண்ணுயிர்களை மேம்படுத்த உதவும்.
சாயம் சேர்க்கப்பட்ட உணவுகள், சாக்லேட் மற்றும் இன்ஸ்டன்ட் உணவுகள் போன்றவை குடல் நுண்ணுயிர்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். குழந்தைகளை சர்க்கரை, பேக்கேஜ் உணவு, பதப்படுத்திகள், பிளாஸ்டிக் மற்றும் ரசாயனங்கள் போன்ற ஆபத்தான பொருட்களால் சூழ்ந்து வைத்திருக்கிறோம். அதன் பின்பு குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்று மீண்டும் அதற்கு ஆண்டிபயாட்டிக்ஸ் வாங்கி கொடுத்து அதனுடைய நோய் எதிர்ப்பு சக்தியையும் கெடுத்து விடுகிறோம். பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்து இயற்கையான உணவுகளை உட்கொள்வதன் மூலம், நம் குடல் நுண்ணுயிர்களை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். மேலும் குடல் நுண்ணுயிர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அவசியம்.