
இதயநாளம் மற்றும் இதயக் கட்டமைப்பு தீர்வுகளில் சிறப்பு நிபுணத்துவம் கொண்டு உலகளவில் முன்னணி மருத்துவ தொழில்நுட்ப நிறுவனமாக இயங்கிவரும் மெரில் லைஃப் சயின்ஸ், GISE 2024 (இடையீட்டு இதயவியலுக்கான இத்தாலிய சங்கத்தின் தேசிய காங்கிரஸ்) மற்றும் PCR லண்டன் வால்வ்ஸ் 2024 நிகழ்வுகளில் தனது மைவால் ஆக்டாப்ரோ டிரான்ஸ்கதீட்டர் ஹார்ட் வால்வ் (THV) என்பதனை அறிமுகம் செய்திருப்பதன் மூலம் அதன் வெற்றிகர பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியிருக்கிறது. கட்டமைப்பு சார்ந்த இதய பராமரிப்பை மேம்படுத்துவதில் தனது பொறுப்புறுதியை வெளிப்படுத்த ஒரு உகந்த தளத்தினை புகழ்பெற்ற இந்த அறிவியல் கருத்தரங்கு நிகழ்வுகள் மெரில்-க்கு வழங்கியிருக்கின்றன.
டிரான்ஸ்கதீட்டர் பெருநாடி வால்வு மாற்று (TAVR) மருத்துவச் செயல்முறைகளுக்கு இதன் புத்தாக்க பங்களிப்புகளுக்காக மைவால் THV சீரிஸ் சிறப்பாக அறியப்படுகிறது. இந்நிலையில் மைவால் ஆக்டாப்ரோ THV மூலம் புதிய தரஅளவுகோல்களை நிறுவியிருக்கிறது. மேம்படுத்தப்பட்ட, செயல்முறை சார்ந்த கணிப்பிற்காக துல்லியமான பயன்படுத்தலை இது ஏதுவாக்குவதுடன் ஆபரேட்டரின் கட்டுப்பாட்டையும் மேம்படுத்துகிறது. கூடுதலாக இதன் விரிவான அளவு மேட்ரிக்ஸ், மாறுபட்ட நோயாளிகளின் உடலமைப்பிற்கு ஏற்ற பொருத்தமான வால்வு தேர்வு செய்யப்படுவதை உறுதி செய்யப்படுகிறது. இத்தொகுப்பில் வழக்கமான அளவு மற்றும் இடைநிலை மற்றும் கூடுதல் பெரிய அளவிலான வால்வ் ஆகியவை உள்ளடங்கும்.
சென்னை, அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் கட்டமைப்பு சார்ந்த இதயநோய் செயல்திட்டத்தின் கிளினிக்கல் லீடு மற்றும் முதுநிலை இடையீட்டு இதயவியல் நிபுணர், டாக்டர். G செங்கோட்டுவேலு இது தொடர்பாக கூறியதாவது: “GISE 2024 மற்றும் PCR லண்டன் வால்வ்ஸ் 2024 நிகழ்வுகளில் மைவால் ஆக்டாப்ரோ டிரான்ஸ்கதீட்டர் ஹார்ட் வால்வ் அறிமுகம் செய்யப்பட்டிருப்பது, டிரான்ஸ்கதீட்டர் பெருநாடி வால்வு மாற்று சிகிச்சை தொழில்நுட்பத்தை முன்னெடுப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் நிகழ்வாகும். மிக முக்கியமான மருத்துவ தேவைகளை துல்லியமாக தீர்வு காண்பதிலும் மற்றும் புத்தாக்கத்திலும் மெரில் கொண்டிருக்கும் பொறுப்புறுதியும், வெளிப்படுத்தும் அர்ப்பணிப்பும் பாராட்டுதலுக்குரியவை. ஆபரேட்டர் கட்டுப்பாட்டை அதிகரிக்கவும் மற்றும் நோயாளிக்கான சிகிச்சை விளைவுகளை மேம்படுத்தவும் தீர்வுகளை வழங்குவதன் மூலம் மைவால் ஆக்டாப்ரோ THV, கட்டமைப்பு சார்ந்த இதய பராமரிப்பில் ஒரு புதிய தரஅளவுகோலை நிறுவியிருக்கிறது. புரட்சிகரமான இச்சாதனைக்காக மெரில்-ன் ஒட்டுமொத்த குழுவினரையும் நான் பாராட்டுகிறேன். உலகளவில் இதய சிகிச்சை பராமரிப்பில் இதன் சிறப்பான தாக்கத்தை நான் ஆவலோடு எதிர்நோக்குகிறேன்”.
சென்னை காவேரி மருத்துவமனையின் TAVI மற்றும் இதய உறுப்புமாற்று ஸ்டெம் செல் சிகிச்சை மற்றும் CRY இதயத்தசை நோய் கிளினிக்-ன் முதன்மை மருத்துவரான டாக்டர். R அனந்தராமன் இது தொடர்பாக பேசுகையில், “மைவால் ஆக்டாப்ரோ, ஃபோர்ஷார்டெனிங்-ஐ 10% குறைத்து, பிரதான நிலை மீதும் மற்றும் இறுதியாக வால்வு பொருத்துவதிலும் மிகப்பெரிய கட்டுப்பாட்டை எனக்கு வழங்குகிறது. உலகெங்கிலுமுள்ள இதய மருத்துவ நிபுணர்கள் சமூகத்தின் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கும் மைவால் ஆக்டாப்ரோ, இதயவியல் நிபுணர்கள் கண்டிப்பாக கொண்டிருக்க வேண்டிய தொழில்நுட்பமாக இருக்கப்போவது நிச்சயம். முக்கியமான மருத்துவச் சவால்களை இத்தகைய துல்லியத்தோடு தீர்வுகாண உதவியிருப்பதன் மூலம் கட்டமைப்பு சார்ந்த இதய தீர்வுகள் பிரிவின் உலகளவில் தனது தலைமைத்துவ நிலையை மெரில் மீண்டும் உறுதி செய்திருக்கிறது” என்று கூறினார்.
PCR லண்டன் வால்வ்ஸ் 2024 நிகழ்வில் மைவால் டிரான்ஸ்கதீட்டர் ஹார்ட் வால்வ் (THV) சீரிஸ்-ன் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மேலும் வலுவாக நிரூபிக்கும் விதத்தில் லேண்டுமார்க் ஆய்வு துணை தொகுதி பகுப்பாய்வு மற்றும் ஒப்பீடு ஆய்வுகளிலிருந்து கிடைக்கப்பெற்ற முக்கிய கண்டறிதல்களை மெரில் சமர்ப்பித்தது. ஈரோஇண்டர்வென்ஷன் என்ற இதழில் பிரசுரிக்கப்பட்ட இந்த ஆய்வின் கண்டறிதல் முடிவுகள், வால்வு பதியத்திற்கு பிறகு 30 நாட்களில் சேப்பியன் மற்றும் எவலூட் வால்வ் சீரிஸ்-க்கு மைவால் THV தரம் குறைந்ததில்லை என்பதை உறுதி செய்திருக்கின்றன. இதன் மூலம் கட்டமைப்பு ரீதியிலான இதய இடையீட்டு நடவடிக்கைகளுக்கு நம்பகமான தீர்வு என்ற தனது அந்தஸ்தை மைவால் THV உறுதியுடன் வலுவாக்கியிருக்கிறது.