அதிகளவு மனச்சோர்வினால் ஏற்படும் உடல் பருமன் மாற்றங்கள் குறித்து ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா தரண் நம்மிடம் விளக்குகிறார்.
நமது சாப்பாட்டுக்கும், நாம் பேசுவதற்கு கூட சம்பந்தம் இருக்கு. ராத்திரி நல்லா தூங்கி, காலையில் எழுந்து, தண்ணீர் குடித்து, வாக்கிங் போய் டாய்லெட்லாம் போனாதான் மனசும் சுத்தமா இருக்கும். நம்முடைய அறிவாற்றலுக்கு, விட்டமின் போன்ற நிறைய சத்துக்கள் தேவை. நாம் அறிவா இருப்பதற்கே நாம் நல்லா சாப்பிட வேண்டும். இல்லையென்றால், குடல் நமது மனசையும் பாதிக்கும், சிந்திக்கும் திறனையும் பாதிக்கும், அறிவாற்றல் என எல்லாவற்றையும் பாதிக்கும். நாம் சாப்பிடுற சாப்பாட்டுக்கும், நாம் சிந்திக்கும் திறனுக்கும், நமது மனசுக்கும் ரொம்ப ரொம்ப சம்பந்தம் இருக்கு.
மனச்சோர்வு, மன அழுத்தம், மனப்பதற்றம் இவையெல்லாம் வேறு வேறு தான். மனச்சோர்வு என்பது காலையில் எழுவது முதல் எந்த வேலையும் செய்ய பிடிக்காது. ஒரு நிமிடம் நன்றாக இருப்பார்கள், அடுத்த நிமிடம் நல்லா இருக்க மாட்டாங்க. மனப் பதற்றம் என்றால், பேனிக் அட்டாக் மாதிரி திடீரென மயக்கம் போட்டு விழுவார்கள், ஒரு மாதிரி படபடப்பாக இருப்பார்கள். அவர்களுக்கு சோர்வும் இருக்கும், அதே சமயம் பதற்றமும் இருக்கும். குண்டாக இருப்பதற்கும், மனச்சோர்வுக்கும் சம்பந்தம் இருக்கா? என ஆராய்ச்சி செய்கிறார்கள். அதில், குண்டாக இருப்பவர்களுக்கு 40 இருந்து 60 சதவீதம் வரை மனச்சோர்வும், மனப்பதற்றமும் இருக்கிறது எனச் சொல்கிறது. அதே போல், மனச்சோர்வில் இருப்பவர்களை டெஸ்ட் செய்த போது 40 இருந்து 60 சதவீதம் வரை குண்டாக இருக்கிறார்கள் எனக் காட்டுகிறது.
உடல் பருமனாக இருப்பவர்களை டையட் கொடுத்து உடம்பை இழைக்க வைப்போம், மனசை சரிசெய்யவே மாட்டோம். அதனால், மனசு பிரச்சனையால் மனச்சோர்வு அதிகமாகி சாப்பிட ஆரம்பித்து மீண்டும் உடல் பருமனாக ஆவார்கள். ஒருவேளை, அவர்களுக்கு மனச்சோர்வு இருப்பதை தெரிந்து மனசை சரிசெய்து உணவு பழக்கத்தை சரி செய்ய மாட்டோம். அதனால், நல்லா சாப்பிடாமல், உடற்பயிற்சி இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கனும் என்றால் கண்டிப்பாக அது நடக்காது. நம்மை நாம் மாத்திக்காமல் மனசு சரி ஆகாது. எனவே, மனச்சோர்வையும், உணவு பழக்கத்தையும் இரண்டையுமே சரி செய்யனும்.
என்னிடம் 120 கிலோ கொண்ட ஒருத்தர் வந்தார். அவரது அம்மா, கூட பிறந்தவர்கள், அனைவர் வீட்டிலும் சிக்கல். இது போன்ற மனச்சிக்கல், மனப்பதற்றத்தினால் 120 கிலோ வரை உடல் பருமனாகி விட்டார். கொஞ்சமாகதான் சாப்பிடுகிறேன் எப்படி உடல் பருமன் ஆனேன் என தெரியவில்லை என அவர் கூறுகிறார். அவருடைய ஸ்ட்ரெஸ் ஹார்மோன்ஸ் குடலை பாதித்திருக்கிறது. குடல், எதையோ தூண்டி சரியா சாப்பிடாமல் இருந்திருக்கிறார். அவருக்கு கவுன்சிலிங் பண்ணும் போது அவருக்கு இதுயெல்லாம் புரிகிறது. இது மாதிரி நிறைய சம்பவங்கள் இருக்கிறது.
ஒருத்தர் பயங்கரமான அல்சர் பிரச்சனையில் வந்தார். அவர் வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் கிடையாது. எல்லா விஷயத்தையும் சரியாக செய்வார். கோடி கணக்கில் சம்பாதித்துவிட்டார். ஆனால், ஒரு மனப்பதற்றத்திலே இருக்கிறார். வாக்கிங், யோகா, உடற்பயிற்சி, உணவு பழக்கம் என நான் சொன்ன அனைத்தையும் சரியாக செய்கிறார். ஆனால், அவருக்கு உடம்பு சரி ஆகவில்லை. என்ன பிரச்சனை என்று பார்த்தால், அவர் பயங்கர ஃபெர்பக்சன். அவர் ஃபெர்பக்சனாக இருப்பதில் பிரச்சனையில்லை. ஆனால், அதை மற்றவர்களிடமும் எதிர்பார்க்கிறார். அது கொஞ்சம் தவறும் போது கூட அவரால் பதற்றத்தை கையாள முடியவில்லை. எல்லாத்தையும் பேலன்ஸாக இருங்கள் என அவருக்கு கவுன்சிலிங் கொடுத்தோம்.