Skip to main content

ஹார்ட் அட்டாக்கிற்கும் ஹார்ட் ஃபெயிலியருக்குமான வித்தியாசம்

Published on 23/01/2023 | Edited on 23/01/2023

 

Heart attack and Heart Failure difference

 

இதய அடைப்பிற்கும், இதய செயலிழப்பிற்குமான வித்தியாசம் என்ன? இரண்டையும் எப்படி வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட சில கேள்விகளை இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சுரேஷ் ராவ் அவர்களை நக்கீரன் நலம் யூடியூப் சார்பாக சந்தித்த போது அவரிடம் முன் வைத்தோம். அதற்கு அவர் அளித்த விளக்கம் பின்வருமாறு..

 

இதய அடைப்பு (ஹார்ட் அட்டாக்)
இதயத்திற்கும் ரத்த ஓட்டம் தேவைப்படும். அதற்கும் ஆக்சிஜன் தேவை இருக்கும். இதயத்தில் உள்ள ரத்தநாளங்களில் ரத்த ஓட்டம் குறையும் போது, ஆக்சிஜன் அளவு குறையும் போது இதயத்துடிப்பின் அளவு குறைந்து போகும். இது தான் இதய செயலிழப்பு (ஹார்ட் அட்டாக்). மீண்டும் இதயத்திற்கு போகிற இரத்த அளவை சரி செய்து கொள்வதன் மூலம் குணப்படுத்திக்கொள்ள வாய்ப்பும் இருக்கிறது.

 

இதயச் செயலிழப்பு (ஹார்ட் ஃபெயிலியர்)
இதயம் துடிப்பதே ஒட்டுமொத்தமாக குறைந்தால் அது இதயச் செயலிழப்பு. இதய அடைப்பு ஏற்பட்டதற்கு பிறகான அடுத்த நிலையாக இதயச் செயலிழப்பை நோக்கி நகர வாய்ப்பிருக்கிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது. மரபு வழியாக அப்பாவிற்கு இருந்தும் அவர்கள் வழியாக பிறந்த பிள்ளைகளுக்கும் வர வாய்ப்பிருக்கிறது. ஆல்கஹாலுக்கு அடிமையாகி தீவிர குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு ஈரலில் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படுதோ அதே போல இதயத்திற்கு போகிற இரத்த அளவும் குறைந்து கொண்டே வந்து இதயத்தினையும் பாதிப்புக்கு உள்ளாக்கும். செயலிழக்கச் செய்யும். 

 

 

Next Story

உற்சாகமாய் பள்ளிக்குச் சென்ற மாணவிக்கு நேர்ந்த சோகம்!

Published on 21/12/2023 | Edited on 21/12/2023
Tragedy happened to the student when she went to school at karnataka

கர்நாடகா மாநிலம், சிக்கமகளூரு மாவட்டம், கேசவலு ஜோகன்னகெரே கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஜுனா. இவருக்குத் திருமணமாகி சுமா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியருக்கு சிருஷ்டி (13) என்ற மகள் இருந்தார். சிருஷ்டி, தரடஹள்ளி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் தனது பள்ளிக்குத் தினமும் நடந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில், சிருஷ்டி நேற்று (20-12-23) காலை வழக்கம்போல் தனது பள்ளிக்குச் செல்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டு தரடஹள்ளி சர்க்கிள் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, சிருஷ்டிக்கு திடீரென்று மயக்கம் ஏற்பட்டு சுருண்டு விழுந்தார். இதனைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து, சிறுமியை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

அங்கு அவரை, மருத்துவர்கள் பரிசோதித்தனர். அப்போது, மாணவி ஏற்கெனவே இறந்துவிட்டதாகவும், மாரடைப்பால் அவர் சுருண்டு விழுந்து இறந்ததாகவும் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி மாரடைப்பால் இறந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

சின்ன வயதில் ஹார்ட் அட்டாக் வர காரணம் என்ன ? - டாக்டர் அருணாச்சலம் விளக்கம்

Published on 20/10/2023 | Edited on 20/10/2023

 

Dr Arunachalam - Heartattack - Health care

 

இளம் வயதிலேயே சிலர் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு இறக்கும் சூழலை சமீப காலமாக பார்க்கிறோம். இதற்கு என்னதான் காரணம் என்ற கேள்வியை பிரபல மருத்துவர் அருணாச்சலம் அவர்களிடம் முன் வைத்தோம். அவர் அளித்த விளக்கம் பின்வருமாறு..

 

கொரோனா தடுப்பூசி போட்டதால் தான் சமீபத்தில் அதிக அளவில் ஹார்ட் அட்டாக் வருவதாக சொல்லப்படுவது முற்றிலும் அறிவியலுக்கு எதிரானது. பெரும் ஆய்வில் கொரோனா தடுப்பூசிக்கும் மாரடைப்பு ஏற்படுவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நிரூபித்திருக்கிறார்கள். கொரோனா பெரிய பாதிப்பை நம்மிடையே ஏற்படுத்திச் சென்றது என்பது உண்மை தான். உறவுகளை இழந்தவர்களின் வலியை நம்மால் உணர முடிகிறது.

 

இதய நோய்க்கும் மன அழுத்தத்திற்கும் பெரிய தொடர்பு இருப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பது தூக்கத்தினை தொலைத்த சமுதாயமாக இருக்கிறோம். இரவுகளின் அதிக நேரம் கண் விழிக்கிறோம். அதற்கு பல காரணிகள் நம்மிடையே இருக்கிறது. இரவு நேர வேலை வாய்ப்புகள், இரவு நேர சினிமா, இரவு நேர கொண்டாட்டங்கள் என்று தூக்கத்தினை தொலைக்கிறோம். 

 

கொரோனா காலத்தில் சரியாக தூங்காமல் எல்லாரும் இரவு தூங்க நேரமாகிறது. பெரியோர்களிடமிருந்து இந்த பழக்கம் சிறியவர்களையும் தொற்றிக் கொண்டது. மீண்டும் பகலில் தூங்காமல் இரவு மட்டுமே தூங்கி, குடும்பத்தோடு இந்த பழக்கத்தை கொண்டு வந்தால் சரி செய்ய முடியும். இல்லையென்றால் குழந்தைகள் தூக்கமின்மையால் உடலும் மனமும் கெட்டுப் போகும். இது அவர்களுக்கு இதய நோயை நோக்கித்தான் நகர்த்திச் செல்லும்.

 

தூக்கமின்மையினால் மட்டுமே தான் பல்வேறு சிக்கல்கள் ஆரம்பிக்கிறது. தூக்கமின்மை சரியான உணவு உண்ணாமையை கொண்டு வரும், அது இதய நோய் சிக்கலாகத்தான் மாறும், அதனால் அட்டாக் வரத்தான் செய்யும். எனவே நன்றாக தூங்கி நன்றாக உணவு உண்டு ஆரோக்கிய வாழ்வு முறையைப் பின்பற்றி ஹார்ட் அட்டாக்கிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.