இதய அடைப்பிற்கும், இதய செயலிழப்பிற்குமான வித்தியாசம் என்ன? இரண்டையும் எப்படி வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட சில கேள்விகளை இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சுரேஷ் ராவ் அவர்களை நக்கீரன் நலம் யூடியூப் சார்பாக சந்தித்த போது அவரிடம் முன் வைத்தோம். அதற்கு அவர் அளித்த விளக்கம் பின்வருமாறு..
இதய அடைப்பு (ஹார்ட் அட்டாக்)
இதயத்திற்கும் ரத்த ஓட்டம் தேவைப்படும். அதற்கும் ஆக்சிஜன் தேவை இருக்கும். இதயத்தில் உள்ள ரத்தநாளங்களில் ரத்த ஓட்டம் குறையும் போது, ஆக்சிஜன் அளவு குறையும் போது இதயத்துடிப்பின் அளவு குறைந்து போகும். இது தான் இதய செயலிழப்பு (ஹார்ட் அட்டாக்). மீண்டும் இதயத்திற்கு போகிற இரத்த அளவை சரி செய்து கொள்வதன் மூலம் குணப்படுத்திக்கொள்ள வாய்ப்பும் இருக்கிறது.
இதயச் செயலிழப்பு (ஹார்ட் ஃபெயிலியர்)
இதயம் துடிப்பதே ஒட்டுமொத்தமாக குறைந்தால் அது இதயச் செயலிழப்பு. இதய அடைப்பு ஏற்பட்டதற்கு பிறகான அடுத்த நிலையாக இதயச் செயலிழப்பை நோக்கி நகர வாய்ப்பிருக்கிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது. மரபு வழியாக அப்பாவிற்கு இருந்தும் அவர்கள் வழியாக பிறந்த பிள்ளைகளுக்கும் வர வாய்ப்பிருக்கிறது. ஆல்கஹாலுக்கு அடிமையாகி தீவிர குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு ஈரலில் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படுதோ அதே போல இதயத்திற்கு போகிற இரத்த அளவும் குறைந்து கொண்டே வந்து இதயத்தினையும் பாதிப்புக்கு உள்ளாக்கும். செயலிழக்கச் செய்யும்.