Skip to main content

கண் சிவப்பாக இருப்பதற்கான காரணம் என்ன? - கண் சிறப்பு மருத்துவர் சசிகுமார் விளக்கம்

 

  Dr Sasikumar | Eye care | Drink Water

 

கண்களின் ஆரோக்கியத்துக்கு முக்கியம் தர வேண்டியது அவசியமாகும். கண் சிவப்பாக இருப்பதற்கான காரணம் குறித்து கண் சிறப்பு மருத்துவர் சசிகுமார் விவரிக்கிறார்

 

கண் காய்ந்துபோகும் பிரச்சனை என்பது பலருக்கும் ஏற்படக்கூடிய ஒன்று. கண்ணின் இமையில் எண்ணெய் உற்பத்தியாகி வெளியேறும் துவாரங்களில் தண்ணீர் போல் வெளியேற வேண்டிய எண்ணெய் கெட்டியாகிறது. இதனால் கண்ணுக்கு பாதுகாப்பு இல்லாமல் போகிறது. இதனால் கண்களில் புண் ஏற்பட்டு சிவப்பு நிறத்துக்கு மாறுகிறது. தூக்கமின்மையால் தான் கண்கள் சிவக்கின்றன என்று பலர் தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். நாம் டென்ஷனாக இருக்கும்போது வயிற்றின் தண்ணீர் உறிஞ்சும் சக்தி குறையும். 

 

எனவே வயிறு புண்ணான பிறகு எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் அதனால் பயனில்லை. சர்க்கரை நோயாளிகளுக்கும் இந்த பிரச்சனை ஏற்படும். இதனால் வயிறு காய்ந்து போகிறது. கண்கள் சிவந்து போதல், கண்களில் உறுத்தல் ஏற்படுதல், கண்களில் தண்ணீர் வடிதல் போன்றவை இதற்கான அறிகுறிகளாக இருக்கும். சொட்டு மருந்து மட்டும் இதற்கு பத்தாது. கண்ணில் இருக்கும் எண்ணெய் தண்ணீரோடு கலக்க வேண்டும். இதன் மூலம் கண்களில் வலுவலுப்பு ஏற்படும். அப்போதுதான் கண் காய்ந்து போகும் பிரச்சனை சரியாகும். 

 

வெதுவெதுப்பான தண்ணீரில் கண்களுக்கு ஒத்தடம் கொடுக்கலாம். சோற்றுக்கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தலாம். கண்களில் கைகள் மூலம் மசாஜ் செய்யலாம். இந்த நேரத்தில் கண்களை அழுத்தக்கூடாது. இதை காலையில் ஒருமுறை, மாலையில் ஒருமுறை செய்யலாம். வயிற்றில் புண், வயிற்றில் எரிச்சல், தலைவலி, தூக்கம் கெடுதல், சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படுதல், சர்க்கரையின் அளவு அதிகமாதல், மலச்சிக்கல் போன்ற பல்வேறு பின்விளைவுகள் தண்ணீர் குடிக்காமல் இருப்பதால் ஏற்படும்.
 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !