எனக்கு 50 வயது கூட ஆகவில்லை. ஆனால் எலும்பு தேய்மானம் ஆகிவிட்டது என்று சொல்வதுண்டு. அதற்கு என்ன காரணம் என்பதையும் தீர்வினையும் நமக்கு டாக்டர் அருணாச்சலம் விளக்குகிறார்
நமது பள்ளிக்காலங்களில் கணக்கு பாடத்திற்கு பிறகு மிக முக்கியத்துவம் தர வேண்டியது பிசிக்கல் எஜிகேசன் ஆகும். உடற்கல்வி ஆசிரியருக்கு முக்கியத்துவம் தந்து நமது உடலை மேம்படுத்த தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால், பல பள்ளிகளில் உடற்கல்விக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதில்லை என்பது வருத்தமான செய்தி.
காலை எழுந்ததுமே உடலினை உழைப்பதற்கு தயார் செய்யாதது தான் எல்லா பிரச்சனைகளின் ஆரம்பமாக இருக்கிறது. காலையில் ஒரு ஸ்ட்ரெச்சிங் எக்சர்சைஸ் செய்து விட்டு வாக்கிங், சைக்கிளிங், ஸ்விம்மிங், இப்படி ஏதாவது செய்துவிட்டு அன்றைய நாளை ஆரம்பிக்க வேண்டும். அல்லது குறைந்த பட்சம் ஏதாவது ஒரு வியர்க்க வைக்கிற விளையாட்டுகளான டென்னிஸ், கிரிக்கெட் போன்ற ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும். அப்படி செய்யாமல் இருப்பது நம்மை நோய் துரத்துவதற்கு நாமே இடம் கொடுப்பதாகும்.
நிறைய பேர் எக்ஸ்ரே ரிப்போர்ட் உடன் வருவார்கள். கை வலிக்கிறது, கழுத்து வலிக்கிறது என்ன செய்யலாம் என்று கேட்பார்கள். அவர்கள் எல்லாருக்குமான பதில் தான் எலும்பு தேய்மானத்திற்குமான பதில். தினமும் ஒரு மணி நேரம் செய்கிற உடற்பயிற்சி தான் உங்களை எலும்பு தேய்மானத்திலிருந்து காக்கும்.
உடற்பயிற்சி செய்வதால் எழும்பு எப்படி தேய்மானம் அடையாமல் இருக்கும் என்று கேள்வி எழலாம். உடம்பில் உள்ள எழும்புகள் அதன் மூட்டுகள் தசைகளைக் கொண்டு நிரம்பி இருக்கும். அவற்றை நாம் அசைக்க, இயக்க பயன்படுத்த வேண்டும். அதற்கு ஸ்ட்ரெச்சிங் எக்சர்சைஸ் செய்வதால் அதை வலது இடது, மேலும் கீழும் நாம் சுழற்றுவதால் அது இயங்கிக் கொண்டிருப்பதை அதிகப்படுத்தும். அப்போது தேய்மானம் ஆகாது. சும்மாவே விட்டு விட்டால் அது தேய்மானத்தை நோக்கித்தான் நகரும்.
உடற்பயிற்சி செய்வதால் தசை சுருங்கி விரியும் அப்போது அங்கே சீரான இரத்த ஓட்டம் நிகழும். அது எழும்புகளுக்கு சக்தியைத் தரும் அதனால் எழும்பு தேய்மானம் அடையாமல் இருக்கும். மேலும் கடல் சார்ந்த உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்வதால் அது எழும்பிற்கு தேவையான தாதுப்பொருட்களை வழங்கி தேய்மானத்தை தவிர்க்கும்.
கால்சியம் சார்ந்த உணவுகளான பால், முட்டை எடுத்துக் கொள்ள வேண்டும். அவை உடலுக்கு தேவையான தாதுப்பொருட்களை தரும். அந்த தாதுக்களின் சக்தி சரியாக எழும்புகளுக்கு செல்ல வேண்டுமென்றால் நாம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்தால் எழும்பு தேய்மானம் அடையாமல் தவிர்க்கலாம்.