Skip to main content

சமூக வலைதளங்கள், பயனர்களுக்கு சரியான செய்திகளை வழங்குகின்றனவா?

Published on 12/02/2021 | Edited on 12/02/2021

 

does social media provides accurate images for articles

 

சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்திகளில் கூறப்படும் கருத்துக்களும், படங்களும் ஒன்றுக்கொன்று பொருந்துகின்றனவா? என்பதைப் பற்றிய புதிய ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அவற்றில் பெரும்பாலும் அந்தக் கருத்துக்களும், அவற்றின் படங்களும் ஒன்றுடன் ஒன்று பொருந்துவதில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.

 

இது குறித்து ‘ஜர்னல் ஆஃப் ஹெல்த் கம்யூனிகேஷன்’ இல் இடம்பெற்ற இந்த ஆய்வில், சமூக வலைதளங்களில் வெளிவரும் போஸ்டுகளில் பதிவிடப்படும் புகைப்படங்களுக்கும் அது தொடர்பான செய்திகளுக்கும் உள்ள ஒற்றுமை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

 

பெரும்பாலும், இந்தப் புகைப்படங்களுக்கும் அது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லாதது கண்டறியப்பட்டது. மேலும், இவை ஒன்றுக்கொன்று முரணாக அமைந்துள்ளதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

 

உதாரணமாக, குழந்தைகளுக்கான பாதுகாப்பான சைக்கிள் ஓட்டும் முறை பற்றிய செய்தியில், தலையில் அடிபடுவதைத் தடுக்க 'ஹெல்மெட்' உபயோகப்படுத்த அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், அந்தச் செய்தியில் உள்ள புகைப்படத்தில் 'ஹெல்மெட்' அணியாத குழந்தையின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

 

மற்றொரு 'பம்பர் ஃப்ரீ கிரிப்களை' (bumper-free crib) ஆதரிக்கும் செய்தியானது, பம்பர் உடன் கூடிய குழந்தைகளுக்கான புகைப்படத்தைக் கொண்டிருந்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இவ்வாறாகப் புகைப்படங்களும் அதற்கான செய்திகளும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாது உபயோகப்படுத்தப்படுவது முரண்பாடுகளை மட்டுமல்ல, பல்வேறு சமயங்களில் தவறான புரிதல்களையும் உருவாக்குவதால் பெரும் ஆபத்தையும் விளைவிக்கக்கூடும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

 

இந்த ஆய்வில், புகைப்படங்கள் ஒன்றுக்கொன்று பொருந்தாத நிலையிலும் இவை சரியான கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கிறதா? என்பது பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளது. 150 பெற்றோர்களைக் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வில் மூன்று பொருத்தமான செய்திகளும், மூன்று பொருத்தமில்லாத செய்திகளும் இடம் பெற்றிருந்தன.

 

இந்த இரண்டு பதிவுகளை ஒப்பிடும்போது, அவர்கள் பொருந்திய புகைப்படத்தினை கண்டறிய 3.3 வினாடிகள் எடுத்துக்கொண்டனர். அதேசமயம், பொருந்தாத புகைப்படத்திற்கு 5.3 வினாடிகள் செலவிட்டனர்.

 

மேற்கூறியவற்றில், இந்தப் பொருத்தமான செய்திகள் வாசிப்பாளர்களிடம் அதிக தாக்குதலையும், அதிக புரிதலையும் உருவாக்குகின்றன. மேலும், பொருத்தமான செய்திகள் புரிந்துகொள்வதற்கும், நினைவு கூறுவதற்கும் உதவுகிறது.

 

70% அதிகமான மக்கள் சமூக வலைதளங்களை உபயோகப்படுத்துவதால் பாதுகாப்பு முறைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் சமூக வலைதளம் பெரும்பங்கு வகிக்கிறது.

 

இதுபற்றி, லாரா மெக்கென்சி (Lara McKenzie) என்பவரின் ஆராய்ச்சியின் படி, பொதுவாக, குறிப்பிட்ட செய்திகளை வாசிக்கத் தூண்டும் ஆர்வத்தைப் புகைப்படங்கள் தூண்டுகின்றன. ஆகையால், புகைப்படங்களும் அது தொடர்பான செய்திகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையாக இருப்பது இன்றியமையாததாகும் என்கிறார்.

 

எனவே, உடல் நலம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான செய்திகளை அதிக கவனத்துடன் வெளியிடுவது காலத்தின் கட்டாயம்!

 

Next Story

பறக்கும் முத்தத்தால் பந்தாடிய மனைவி!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
The husband who flew because of the flying kiss

நாகையில், மனைவிக்கு பறக்கும் முத்தம் (flying kiss) கொடுத்த கணவரை மனைவியே அடியாட்களை வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாகை தேவூர் பகுதியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் செந்தமிழ் செல்வன். அவருடைய மனைவி சுதா. அவரும் சித்த மருத்துவராக உள்ளார். செந்தமிழ் செல்வன் - சுதா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 10 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது. இருவரும் முறையாக விவாகரத்து பெற்றுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி தன்னுடைய 13 வயது மகனைப் பார்ப்பதற்காக செந்தமிழ் செல்வன் சென்றுள்ளார். ஆனால் அவரது மனைவியான சுதா மகனை சந்திப்பதற்குத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்தநிலையில், அடிக்கடி சுதா பணியாற்றும் மருத்துவமனைக்கு வரும் செந்தமிழ் செல்வன், பறக்கும் முத்தம் (flying kiss) கொடுப்பதைப் போல் செய்வதால், தொல்லை தாங்க முடியாத சுதா அடியாட்களை வைத்து செந்தமிழ் செல்வனை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த செந்தமிழ் செல்வன் மருத்துவமனையில் தலையில் கட்டுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story

விபரீத இன்ஸ்டா ரீல் இளைஞர்கள் கைது; போலீசார் எச்சரிக்கை

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
nn

அண்மைக்காலமாகவே 'மாஸ்' என்ற பெயரில் ஆயுதங்களுடன் இளைஞர்கள், மாணவர்கள் நடந்து வருவது, தாக்குவது, ஆபத்தான முறையில் வாகனங்களில் பயணம் செய்வது போன்ற ரீல்ஸ் வீடியோக்கள் வெளியாகி நடவடிக்கைகளுக்கு உள்ளாகி வருகிறது.

இந்நிலையில் இளைஞர் ஒருவர் நீர் நிலையில் மிகவும் ஆபத்தான முறையில் இன்ஸ்டா வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த இளைஞரையும் அதற்கு உதவியவர்களையும் கைது செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது. வைகை ஆற்றில் தண்ணீரில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து அந்த நெருப்புக்குள் குதித்து வீடியோ எடுத்து அதனை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் இளைஞர் ரீல்ஸாக வெளியிட்டுள்ளார். இதுதொடர்பான அந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரீல்ஸ் மோகத்தால் இது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வரும் நிலையில், இது ரீல்ஸ் எடுப்பவர்களின் உயிருக்கு கேடு விளைவிப்பதோடு மட்டுமல்லாது, நீர்நிலைகளில் பெட்ரோல் போன்ற பொருட்களை ஊற்றுவதால் நீர்நிலைகளும் மாசு அடையும். எனவே இதுபோன்ற நபர்கள் மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இந்த வீடியோ போலீசாரின் கவனத்திற்கு சென்ற நிலையில் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இவர்கள் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள வைரவம் தருவைகுளத்தில் விபரீதமாக மண்ணுக்குள் குழிதோண்டி அதனுள் இளைஞரை தலைகீழாக புதைத்து சாகசம் செய்து அதை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாவில் பதிவிட்டது தெரியவந்தது. இது தொடர்பாக தீவிர நடவடிக்கை எடுத்த போலீசார் ரஞ்சித் பாலா அவரது நண்பர்கள் சிவக்குமார், இசக்கி, ராஜா ஆகியோர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தற்போது கைது செய்துள்ளனர். மேலும் இதுபோன்ற விபரீத செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.