ஆட்டிசம் குறித்த பல்வேறு தகவல்களை ஹோமியோபதி மருத்துவர் ஆர்த்தி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
மூளையில் ஏற்படும் பிரச்சனையால் வருவதுதான் ஆட்டிசம் என்கிற நோய். 9 மாதத்திலிருந்து 18 மாதத்திற்குள் ஒரு குழந்தையிடம் இதற்கான அறிகுறியை நாம் காணலாம். குழந்தையை நாம் பெயர் சொல்லி அழைக்கும்போது குழந்தை எந்த ரியாக்ஷனும் காட்டாமல் இருப்பது ஒரு அறிகுறி. சில குழந்தைகளிடம் வேகம் அளவுக்கு அதிகமாக இருக்கும். ஒரு இடத்தில் உட்காரும் பொறுமை இருக்காது. ஒரே மாதிரியான வார்த்தைகள் அல்லது சத்தத்தை வெளிப்படுத்திக்கொண்டே இருப்பார்கள். பேசுவதில் குறைபாடு இருக்கும். மற்றவர்களோடு இணைந்து இருப்பதில் சிக்கல் இருக்கும்.
அவர்களுடையது ஒரு சின்ன உலகம். அதில் அவர்கள் நினைப்பதை மட்டுமே செய்வார்கள். எவ்வளவு விரைவாக இந்த நோயை நாம் கண்டறிகிறோமோ, அவ்வளவு விரைவாக குணப்படுத்த முடியும். முன்னோருக்கு இருந்தால் பரம்பரை நோயாக அடுத்த தலைமுறைக்கு ஆட்டிசம் வரலாம். பாதிக்கப்பட்ட குழந்தைகளை நாங்கள் முதலில் நன்கு பரிசோதிப்போம். அவர்களோடு பேசுவோம்.
ஆட்டிசம் பாதித்த குழந்தைகளை சாதாரண குழந்தைகள் போல் பெற்றோர் நடத்தக்கூடாது. அவர்களை எப்படி வளர்க்கப் போகிறோம் என்கிற திட்டம் இருக்க வேண்டும். அவர்களைத் திட்டுவதோ அடிப்பதோ கூடாது. நோயின் தன்மையை முதலில் பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும். பெற்றோரும் கவுன்சிலிங் செல்ல வேண்டும். ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு பால் பொருட்களை கொடுக்கக் கூடாது; துரித உணவுகளையும் கொடுக்கக் கூடாது; ஒமேகா 3 உணவுகள், கீரை, மட்டன் ஆகியவற்றைக் கொடுக்கலாம்.
குழந்தைகளை டிவி மற்றும் மொபைல் ஃபோன் மூலம் இப்போது நாம் கெடுக்கிறோம். அவர்களுடைய ஒவ்வொரு நிலை வளர்ச்சியையும் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். சரியான விகிதத்தில் வளர்ச்சி இல்லாதபோது உடனடியாக நாம் மருத்துவரை அணுக வேண்டும். அதை நாம் செய்தால் விரைவில் அவர்களை சாதாரண நிலைமைக்கு மாற்ற முடியும். கர்ப்ப காலத்தில் தாய்க்கு புகை, மதுப்பழக்கம் இருந்தால் அது குழந்தையை பாதிக்கும். தாயின் உடல்நிலையும், மனநிலையும் குழந்தையை பாதிக்கும்.