Skip to main content

மாணவர் வழிகாட்டி: எல்லா காலத்துக்கும் ஏற்ற வேளாண்மைத்துறை சார் படிப்புகள்! #5

Published on 10/08/2020 | Edited on 10/08/2020
Agricultural courses suitable for all seasons

 

பிளஸ்-2 முடித்த மாணவர்களின் இறுதிக்கட்ட விருப்பப் பட்டியல்களுள் சில பாடப்பிரிவுகள் உண்டு. அவற்றுள் வேளாண்மைத்துறை சார்ந்த பாடப்பிரிவுகளும் அடங்கும்.


இன்றும் நம்மில் பெரும்பாலானோர், பி.எஸ்.ஸி., விவசாயம் படிப்போரை கொஞ்சம் ஏற, இறங்க பார்ப்பதுண்டு. எல்லா துறைகளுமே ஏதோ ஒரு வகையில் தனித்துவம் மிக்கது என்பதில் நமக்கு மாற்றுக்கருத்து இல்லை. 


அதேநேரம், எந்த ஒரு துறையிலும் தொய்வும், சரிவும் ஏற்படலாம். ஆனால் ஒருபோதும் சரிவையோ, வீழ்ச்சியையோ சந்தித்திராத துறை என்றால் அவை வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறைகள் மட்டுமே. காரணம், உலகம் உயிர்ப்புடன் இயங்குவதற்குத் தேவையான உணவை உற்பத்தி செய்வது வேளாண்மைத்துறை என்பதுதான்.


ஆகையால், இத்துறையில் என்னென்ன படிப்புகள் உள்ளன, இத்துறையைப் படிப்பதால் கிடைக்கும் வேலைவாய்ப்புகள், எதிர்காலம் குறித்து சற்று விரிவாக பார்க்கலாம். 


அடிப்படைக் கல்வித்தகுதி: 


12ஆம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடப்பிரிவுகளைப் படித்துத் தேர்ச்சி பெற்றவர்கள் வேளாண்மைத்துறை சார்ந்த பாடப்பிரிவுகளில் சேர்ந்து பயில முடியும்.


என்னென்ன பாடப்பிரிவுகள்?: 


B.Sc., Agriculture (விவசாயம்)

 

B.Sc., Agriculture Management (விவசாய மேலாண்மை)

 

B.Tech., Bio Informatics (உயிர் தகவல்)

 

B.Tech., Agriculture Engineering (வேளாண்மை பொறியியல்)

 

B.Tech., Agriculture Information Technology (விவசாய தகவல் தொழில்நுட்பம்)

 

B.Sc., Horticulture (தோட்டக்கலை)

 

B.Tech., Horticulture (தோட்டக்கலை தொழில்நுட்பம்)

 

B.Sc., Forestry (காடு வளர்ப்பு)

 

B.Sc., Cericulture (பட்டு வளர்ப்பு)

 

B.Tech., Food Process Engineering (உணவு பதப்படுத்துதல்) 


கால அளவு: 


மேற்கண்ட படிப்புகள் அனைத்துமே 4 ஆண்டு பாடப்பிரிவுகள் ஆகும். 


பட்டய படிப்புகள்:


இவைத் தவிர, விவசாயம் (Diploma in Agriculture), தோட்டக்கலை (Diploma in Horticulture) பிரிவுகளில் இரண்டு ஆண்டுகள் கொண்ட டிப்ளமோ எனப்படும் பட்டய படிப்புகளும் வழங்கப்படுகின்றன. 


கோயம்புத்தூர், திண்டிவனம், தர்மபுரி, ஒரத்த நாடு ஆகிய இடங்களில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிற்சி மையங்களில் டிப்ளமோ பாடப்பிரிவுகள் வழங்கப்படுகின்றன. மேலும், திண்டுக்கல்லில் உள்ள காந்தி கிராம பல்கலைக்கழகத்திலும் டிப்ளமோ பயிற்சி அளிக்கப்படுகிறது.


மத்திய தேர்வு முறை:


ஐசிஏஆர் (ICAR - Indian Council for Agriculture Research) நடத்தும் பொது நுழைவுத்தேர்வில் (AIEEA) வெற்றி பெறுவதன் மூலம் மேற்கண்ட பாடப்பிரிவுகளில் சேரலாம். 

இணையத்தள முகவரி: www.icar.org.in

 

மாநில அரசு தேர்வு முறை: 


பிளஸ்-2 பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், வேளாண்மைப் பல்கலைக்கழகம் நடத்தும் மாநில பொது கலந்தாய்வு முறை மூலமாக மாணவர் சேர்க்கை நடைபெறும். 

இணையத்தள முகவரி: www.tnau.ac.in


வேலைவாய்ப்பு: 


இன்றைய நிலையில் உலகம் முழுவதும் 800 கோடி வாடிக்கையாளர்களை உள்ளடக்கிய உணவு உற்பத்தித் துறைக்கு மூலகாரணியாக விளங்குவது வேளாண்மைத்துறை மட்டுமே. அதனால், மனிதர்களுக்கு பசி இருக்கும் வரை இத்துறையில் வேலைவாய்ப்புகளுக்கும் ஒருபோதும் பஞ்சமில்லை.


பி.எஸ்சி., விவசாயம், தோட்டக்கலை படித்தவர்கள் இதே துறையில் எம்.எஸ்சி., எம்.டெக்., என முதுநிலை படிப்பைத் தொடரலாம். 


மத்திய, மாநில அரசுத்துறைகள் மட்டுமின்றி தனியார் துறைகளிலும் வேளாண் ஆராய்ச்சி விஞ்ஞானியாக பணியாற்றலாம். விரிவாக்க அலுவலர், கள அலுவலர், வேளாண் அலுவலர், பண்ணை மேலாளர், ஆராய்ச்சி அலுவலர், தரக்கட்டுப்பாட்டு அலுவலர், வணிக மேம்பாட்டு அலுவலர், விதை தொழில்நுட்ப அலுவலர் மற்றும் வங்கிகள், இன்சூரன்ஸ், உணவுப்பதப்படுத்துதல் உள்ளிட்ட துறைகளில் ஏராளமான வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.


மத்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்கள்:


1. இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம், புது டெல்லி. (Indian Agricultural Research Institute) PUSA, New Delhi -110012.

 

2. தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம், திருச்சி. (National Banana Research Centre)

 

3. மத்திய கரும்பு ஆராய்ச்சி நிறுவனம், கோயம்புத்தூர். (Central Sugarcane Breeding Institute) 

 

4. மத்திய வேளாண்மை பல்கலைக்கழகம், இம்பால், மணிப்பூர்.

 

5. இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம், போர்ட்பிளேர், அந்தமான். (Indian Agricultural Research
Institute),Port Blair, Andhaman.

 

6. இந்திய வேளாண்மை பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம், போபால், புது டெல்லி. (Indian Agricultural
Engineering Research Institute), Bhopal, New Delhi -110 012).

 

7. இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம், ஹைதராபாத். (Indian Agricultural Research Institute), Hyderabad.

 

8. இந்திய உயிர் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம், ராஞ்சி. (Indian Agricultural Bio Technology Institute), Ranchi.


இந்நிறுவனங்கள் பற்றிய மேலதிக விவரங்களை www.icar.gov.in என்ற இணையத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்.


தமிழகத்தில் உள்ள வேளாண்மைக் கல்லூரிகள் விவரம்:


1. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்.

 

2. தமிழ்நாடு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், வாழவச்சானூர், திருவண்ணாமலை.

 

3. தமிழ்நாடு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்த நாடு, தஞ்சாவூர்.

 

4. தமிழ்நாடு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், குடுமியான்மலை, புதுக்கோட்டை.

 

5. முதுநிலை பயிற்சி கல்லூரி, வேளாண்மை பல்கலைக்கழக வளாகம், கோயம்புத்தூர்.

 

6. தமிழ்நாடு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை.

 

7. தமிழ்நாடு வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பல்லாபுரம், குமுளூர், திருச்சி.

 

8. அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருச்சி.

 

9. தமிழ்நாடு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கிள்ளிக்குளம், திருநெல்வேலி.


தோட்டக்கலை மத்திய அரசு கல்லூரிகள் பட்டியல்:


1. Central Institute of Sub-Tropical Horticulture, Lucknow.

 

2. Central Institute of Temperate Horticulture, Srinagar.

 

3. Indian Institue of Horticultural Research, Bangalore.

 

4. Central Institute for Arid Horticulture,Bikaneer, Rajasthan,

 

Web site:- www.icar.gov.in 


தோட்டக்கலை மாநில அரசு கல்லூரிகளின் விவரம்:


1. தமிழ்நாடு தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கோயம்புத்தூர்.

 

2. தமிழ்நாடு தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், பெரியகுளம், தேனி மாவட்டம்.

 

3. தமிழ்நாடு தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மதுரை.

 

4. தமிழ்நாடு தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (பெண்கள்), திருச்சி. இணையத்தள முகவரி: 


வனத்துறை மத்திய அரசு கல்லூரி:

 

Central Forest Research Institute Dehradun, Uttarakhand


வனத்துறை மாநில அரசு கல்லூரிகளின் விவரம்:


தமிழ்நாடு வனத்துறை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மேட்டுப்பாளையம், கோயம்புத்தூர்.


மேலும் விவரங்களை www.tnau.ac.in என்ற இணையத்தள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'கல்லூரி விடுதியில் 20 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும்' - ஆட்சியரிடம் மனு அளித்த மாணவர்கள்

Published on 15/07/2024 | Edited on 15/07/2024
'20 percent reservation in college hostel'-Students who petitioned the judge

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி விடுதியில் பட்டியலின சமூகத்தினருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி கல்லூரி மாணவ மாணவிகள் ஆட்சியரகத்தில் மனு அளித்தனர்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்துள்ள எழுமாத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஏராளமான மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இக்கல்லூரியில் உள்ள தங்கும் விடுதியில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுவதாகவும், பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு பவானி போன்ற பகுதிகளில் விடுதி அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தொலை தூரத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்து கல்லூரிக்கு வருவதால் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு கல்வி பாதிக்கப்படுவதாகவும்,  இதனால் கல்லூரியில் உள்ள விடுதியில் பட்டியலின சமூகத்தினருக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு ஏற்படுத்தித் தர வேண்டும் எனக் கூறி மாவட்ட ஆட்சியரகத்தில் கல்லூரி மாணவ மாணவிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

Next Story

“கல்லூரிச் சேர்க்கை; பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அநீதி” - ராமதாஸ் கண்டனம்

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
ramadoss said that Injustice to bc and mbc in college admissions

தமிழ்நாட்டில் கல்லூரி சேர்க்கையில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கடுமையாக சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் அனைத்து வகையான கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின் போது இட ஒதுக்கீடு எவ்வாறு கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதற்கு தெளிவான முறையில் விதிகள் வகுக்கப்பட்டிருக்கும் நிலையில், அவற்றில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அநீதி இழைக்கும் வகையில் திருத்தம் செய்து கல்லூரிக் கல்வி இயக்குனர் ஆணை பிறப்பித்திருக்கிறார். திமுக ஆட்சியில் பிறப்பிக்கப்பட்டிருக்கும் சமூகநீதிக்கு எதிரான இந்த ஆணை கண்டிக்கத்தக்கதாகும்.

தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இரு கட்டங்களாக நடைபெற்ற கலந்தாய்வுகள் மூலம் 64% இடங்கள் நிரப்பப்பட்டிருக்கும் நிலையில், மீதமுள்ள 36% இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வுகள் அடுத்தடுத்த கட்டங்களில் நடைபெற உள்ளன. சில பாடப்பிரிவுகளில் சேர நினைக்கும் மாணவர்களுக்கு இடம் இல்லாத நிலையும், சில பாடப் பிரிவுகளில் சேர மாணவர்கள் இல்லாத நிலையும் நிலவும் சூழலில், குறைந்த எண்ணிக்கையில் இடங்கள் உள்ள பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கையில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தகைய சூழலில் கல்லூரிக் கல்வி இயக்குனர் கார்மேகம் ஜூலை 2 ஆம் நாள் பிறப்பித்திருக்கும் அரசாணை பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. ‘‘கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பிற்படுத்தபட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் காலியாக இருந்து, அவற்றை நிரப்ப  சம்பந்தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இல்லாத நிலையில், அந்த இடங்களை பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களைக் கொண்டு நிரப்பலாம். அதேநேரத்தில் பட்டியலின/ பழங்குடியின/ மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் காலியாக இருந்தால், அந்த இடங்களை வேறு பிரிவினரைக் கொண்டு நிரப்பக் கூடாது’’ என்பது தான் அவர் பிறப்பித்திருக்கும் ஆணையாகும்.

கல்லூரிக் கல்வி இயக்குனர் பிறப்பித்திருக்கும் ஆணை சமூகநீதிக்கு மட்டுமின்றி, விதிமுறைகளுக்கும்  எதிரானது ஆகும். அரசு கலைக் கல்லூரிகளில் உள்ள அனைத்து இடங்களும் நிரப்பப்பட வேண்டும்; அரசு கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் அனைவருக்கும் வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம் ஆகும். அதற்காகத் தான் காலியாக உள்ள இடங்களை நிரப்பும் வகையில், விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு கடந்த மாதமே நிறைவடைந்து விட்ட நிலையில், இன்று முதல் ஜூலை 5&ஆம் தேதி வரை புதிதாக விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

அந்த நோக்கத்திற்கிணங்க பிற்படுத்தப்பட்ட/மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடங்களை நிரப்ப, அந்த வகுப்புகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இல்லாத நிலையில், அந்த இடங்களை பட்டியலின/பழங்குடியின மாணவர்களைக் கொண்டு நிரப்புவது சரியானது தான். அதன் மூலம் மாணவர் சேர்க்கை இடங்கள் வீணாவது தடுக்கப்படும். இதே அளவுகோல் தான் பட்டியலின/பழங்குடியின மாணவர்களுக்கு  ஒதுக்கப்பட்ட இடங்களுக்கும் பின்பற்றப்பட வேண்டும். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை நிரப்ப அந்த வகுப்புகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இல்லாத நிலையில் பிற்படுத்தப்பட்ட/மிகவும் பிற்படுத்தப் பட்ட மாணவர்களைக் கொண்டு அந்த இடங்களை நிரப்ப அனுமதிப்பது தான் சரியானதாக இருக்கும்.

அதற்கு மாறாக, காலியாக உள்ள பட்டியலின/பழங்குடியினருக்கான இடங்களை வேறு பிரிவினரைக் கொண்டு நிரப்பக் கூடாது என்றால், அந்த இடங்கள் காலியாகவே கிடக்கும்; அவை யாருக்கும் பயன்படாமல் வீணாகி விடும். இது அரசு கலைக் கல்லூரிகளில் உள்ள அனைத்து இடங்களும் நிரப்பப்பட வேண்டும்; அரசு கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் அனைவருக்கும் வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற அரசின் நோக்கத்திற்கு எதிரானதாகும். அரசின் கொள்கைக்கும், சமூகநீதிக்கும் எதிராக இப்படி ஒரு முடிவை எடுக்க கல்லூரிக் கல்வி இயக்குனருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? என்பதே என் வினா.

கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பாக கடந்த மே 22 ஆம் நாள் அப்போதைய உயர்கல்வித் துறை செயலாளர் கார்த்திக், அரசாணை (எண்:110) ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன் இணைப்பில் இடம்பெற்றுள்ள 33 ஆம் பத்தியில் பழங்குடியினருக்கான இடங்கள் கடைசி வரை அப்பிரிவினரைக் கொண்டு நிரப்பப்படாமல் இருந்தால், அந்த இடங்களை பட்டியலினத்தவரைக் கொண்டும், அவர்களும் இல்லாவிட்டால் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/சீர் மரபினரைக் கொண்டும் நிரப்பலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் காலியாக இருந்தால் அந்த இடங்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு/சீர்மரபினரைக் கொண்டு நிரப்பப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடங்கள் காலியாக இருந்தால், அவை பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைக் கொண்டும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடங்கள் காலியாக இருந்தால் அவை பொதுப்போட்டிப் பிரிவினரைக் கொண்டும் நிரப்பப்பட வேண்டும். முஸ்லீம் வகுப்பினருக்கான இடங்கள் காலியாக இருந்தால் அந்த இடங்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைக் கொண்டு நிரப்பலாம் என்றும் உயர்கல்வித்துறையின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களிலும் இதே நடைமுறை தான் அரசு கலைக் கல்லூரிகளில் கடைபிடிக்கப்பட்டு வந்திருக்கிறது.

ஆனால், அதற்கு மாறாக பட்டியலின/பழங்குடியின மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை வேறு எந்தப் பிரிவினரையும் கொண்டு நிரப்பக்கூடாது என்பது மிகவும் பிற்படுத்தப்பட்ட/பிற்படுத்தப்பட்ட வகுப்பு  மாணவர்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும். இதன் மூலம், அவர்கள் கல்லூரிகளில் சேரும் வாய்ப்பு தடுக்கப்படும். இது மிகப்பெரிய சமூக அநீதி. உயர்கல்வித்துறையைப் பொறுத்தவரை அதன் செயலாளர் பிறப்பிக்கும் ஆணை தான் இறுதியானது. அதை மீறி, இப்படி ஒரு சமூகநீதிக்கு எதிரான ஆணையை பிறப்பிக்கக் கல்லூரிக் கல்வி இயக்குனருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? சமூகநீதிக்கு எதிராக செயல்படுவதையே புதிய வாடிக்கையாகக் கொண்டிருக்கும் திமுக அரசு, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு சமூக அநீதி இழைப்பதற்காகவே இப்படி ஓர் ஆணையை கல்லூரி கல்வி இயக்குனர் மூலம் பிறப்பிக்கச் செய்ததா? என்பது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்.

கல்லூரிக் கல்வி இயக்குனரின் வழிகாட்டுதல்படி, அடுத்தக்கட்ட மாணவர் சேர்க்கை வரும் 8 ஆம் நாள் முதல் தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முன்பாக கல்லூரிக் கல்வி இயக்குனரின் ஆணை ரத்து செய்யப்பட வேண்டும். மே 22 ஆம் நாளிட்ட உயர்கல்வித்துறை செயலாளரின் ஆணைப்படியே மாணவர் சேர்க்கை நடைபெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். சமூகநீதி சார்ந்த விவகாரங்களில் திமுக அரசு மயக்கம் கொள்ளாமல், தடுமாறாமல் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.