Skip to main content

வானம் ஒரு போதிமரம்!

Published on 23/03/2018 | Edited on 23/03/2018
weather1


மார்ச்  23 – உலக வானிலை தினம்

வானத்தில் விமானம் பறக்க வேண்டுமா? பூமிக்கு மேல் உள்ள கோல்களை ஆராய்ச்சி செய்ய ராக்கெட் ஏவ வேண்டுமா, கடலில் கப்பல்கள் பயணிக்க வேண்டுமா, மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டுமா, விவசாயிகள் பயிர் செய்ய மழை எப்போது வரும் என தெரிந்து கொள்ள வேண்டுமா? இந்த ஆண்டு மழை எப்படி இருக்கும், வெயில் எப்படி இருக்கும் என மாறிவரும் வானிலையை ஆராய்ந்து தினம் தினம் மனித குலத்துக்கு தெரிவிப்பதே வானியல் அறிஞர்களின் பணி. இவர்கள் தரும் துல்லியமான இந்த தகவல்களை கொண்டு தான் உலகின் கண்ணுக்கு தெரியாத, தெரிந்த பல வேலைகள் நடக்கின்றன.


பூமி உருண்டையாக உள்ளது. வானம் அது எப்படியிருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. இந்த வானிலை அடுத்து என்ன செய்யப்போகிறது என்பதை கண்டறிந்து மக்களுக்கு சொல்லவே வானியல் அறிஞர்கள் உலகம் முழுவதும் உள்ளார்கள். உலகின் ஒவ்வொரு நாட்டிலும் வானிலை ஆய்வு மையம் இருந்தாலும் இதன் தலைமையகவும் ஜெனிவாவில் உள்ளது. இந்த அமைப்பு தான் உலக வானிலை தினத்தை 1950 ஆம் ஆண்டு உருவாக்கியது. 1950 முதல் உலக வானிலை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

வானிலை எந்தளவுக்கு பாதுகாப்பாக இருக்கிறதோ அந்தளவுக்கு தான் மனித இனம் உட்பட உயிரினங்கள், தாவரங்கள் உயிர் வாழ முடியும். அதிகமான புயல் காற்றோ, பலத்த மழையோ, கடும் வெய்யிலோ வந்தால் எந்த உயிருக்கும் உத்திரவாதம்மில்லை.

சமீப ஆண்டுகளாக வானிலை என்பது மாறியுள்ளது. மழைவர வேண்டிய காலத்தில் கடும் வெயிலும், அதீதமான வெயில் காலத்தில் மழை பெய்வதும், அதிக பனி பொழிவும் ஏற்படுகின்றன. இந்த வானிலை மாற்றம் எதனால் ஏற்பட்டது என்றால் மனிதன் இயற்கையை அழிப்பதால் வானிலை அதன் தன்மையை மாற்றிக்கொள்கிறது என்கிறார்கள் வானவியல் அறிஞர்கள்.

இந்த வானிலை மாற்றம் அதன் இயல்பை மீறியுள்ளது, இது தொடர்ந்தால் பனிக்கட்டிகள் உருகி சில நாடுகள், பல நாடுகளின் மாநிலங்கள், நகரங்கள் காணாமல் போகும். வெட்பம் அதிகமாகி மக்கள் இறப்பு அதிகமாகிவிடும், மழை பொழிவு குறையும் என தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள். இதனை பெரும்பான்மை நாடுகள் கண்டுக்கொள்வதேயில்லை. மக்களிடமும் போதிய விழிப்புணர்வுயில்லை.

வானம் எனக்கொரு போதிமரம், நாளும் எனக்கொரு சேதி சொல்லும்…. என வானத்தை வைத்து முதல் பாடலை எழுதி திரைத்துறையில் ஹிட்டடித்தவர் கவிஞர் வைரமுத்து. அவர் சொன்னது போல வானம் ஒவ்வொருவருக்கும் போதிமரம். அது சொல்வதை கேட்டால் உலகம் வெற்றி பெற முடியும். இல்லையேல் ஒருநாள் இந்த பூமி பந்தே அழிந்துபோயிருக்கும்.

சார்ந்த செய்திகள்