Skip to main content

இன்றைய ராசி பலன் -26.09.2023

Published on 26/09/2023 | Edited on 26/09/2023

 

Today rasipalan -07.09.2023

 

இன்றைய  பஞ்சாங்கம்

26-09-2023, புரட்டாசி 09, செவ்வாய்க்கிழமை, துவாதசி திதி பின்இரவு 01.46 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. திருவோணம் நட்சத்திரம் காலை 09.41 வரை பின்பு அவிட்டம். நாள் முழுவதும் சித்தயோகம். ஹயக்ரீவருக்கு உகந்த நாள். தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

இன்றைய ராசிபலன் -  25.09.2023

 

mesham

மேஷம்

இன்று உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டங்கள் குறையும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய மாற்றங்களால் லாபம் பெருகும். சேமிப்பு உயரும்.
 


 

 

reshabam

ரிஷபம்

இன்று நீங்கள் சுறுசுறுப்பின்றி காணப்படுவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் மனஸ்தாபங்கள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிட்டும். உற்றார் உறவினர்களின் உதவியால் பொருளாதார ரீதியான நெருக்கடிகள் ஓரளவு குறையும்.

3

மிதுனம் 

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் தாமதம் உண்டாகும். தொழில் வியாபாரம் சம்பந்தமான புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம். முடிந்த வரை பேச்சை குறைப்பது நல்லது.

kadagam

கடகம்

இன்று உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். உறவினர்கள் தேவையறிந்து உதவுவார்கள். தொழில் சம்பந்தமான வங்கி கடன்கள் எளிதில் கிடைக்கும். சுபமுயற்சிகளில் முன்னேற்றம் இருக்கும்.
 

5

சிம்மம்

இன்று தொழில் வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் பல புதிய அனுபவங்கள் ஏற்படும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்துடன் தூர பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். 

kannirasi

கன்னி

இன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். பயணங்களில் கவனம் தேவை. குடும்பத்தில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். கடன்கள் குறையும்.
 

thulam

துலாம்


இன்று தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் அதிகரிக்ககூடும். பிள்ளைகள் வகையில் வீண் செலவுகள் ஏற்படும். உறவினர்களால் குடும்பத்தில் நிம்மதி குறையும். எதிர்பாராத உதவியால் கடன்கள் விலகும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
 

 

 

viruchagam

விருச்சிகம்


இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். திடீரென்று வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். சிலருக்கு உத்தியோகத்தில் நல்ல மாற்றம் நிகழும்.


 

danush

தனுசு

இன்று உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். அலுவலகத்தில் உடனிருப்பவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை சமாளிக்கலாம். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும்.
 

magaram

மகரம்

இன்று நீங்கள் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். சிலருக்கு நவீன பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு. உங்களின் பிரச்சினைகள் குறைய உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

kumbam

கும்பம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். சகோதர, சகோதரிகள் வழியில் மனசங்கடங்கள் உண்டாகும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழிலில் எதிரிகளால் இருந்த தொல்லைகள் குறையும். தெய்வ வழிபாடு நன்மை தரும்.
 

meenam

மீனம்

இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் ஏற்படும். திருமண சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். வேலையில் புதிய நபரின் அறிமுகம் கிட்டும்.

 

 

 

 

 

Next Story

இன்றைய ராசி பலன்-19.07.2024

Published on 18/07/2024 | Edited on 19/07/2024
Today rasi palan - 26.04.2024

இன்றைய  பஞ்சாங்கம்

19-07-2024, ஆடி 03, வெள்ளிக்கிழமை, திரியோதசி திதி இரவு 07.42 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. மூலம் நட்சத்திரம் பின்இரவு 02.55 வரை பின்பு பூராடம். அமிர்தயோகம் பின்இரவு 02.55 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். 

இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00

இன்றைய ராசி பலன் - 19.07.2024

mesham

மேஷம்

இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடியால் கடன் வாங்க நேரிடும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடையலாம். எதிர்பாராத உதவி கிட்டும்.
 

reshabam

ரிஷபம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் கால தாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் தள்ளி வைப்பது நல்லது. குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். எதிலும் கவனம் தேவை.

3

மிதுனம் 

இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் பெறுவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.
kadagam

கடகம்

இன்று உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத விதமாக திடீர் தனவரவு உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

5

சிம்மம்

இன்று உங்களுக்கு பிள்ளைகள் வகையில் மன நிம்மதி குறையும். வியாபார ரீதியாக பண நெருக்கடிகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் திறமைக்கேற்ற பலன்கள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

kannirasi

கன்னி
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சற்று சுமாராக இருக்கும். தொழில் ரீதியாக எதிர்ப்பார்த்த வங்கி கடன் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். எடுக்கும் முயற்சிகளில் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

thulam

துலாம்

இன்று மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர் கொள்வீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். வேலையில் பல புதிய மாற்றங்களால் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்திற்கான வங்கி கடன் எளிதில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். புத்திர வழியில் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

viruchagam

விருச்சிகம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வமின்றி இருப்பார்கள். உறவினர்கள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காணலாம். நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். கடன்கள் ஓரளவு குறையும்.
 

danush

தனுசு

இன்று உத்தியோகஸ்தர்கள் பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவார்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். எடுக்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். பெண்களின் நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.

magaram

மகரம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் வழியில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும்.
 

kumbam

கும்பம்


இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பிள்ளைகள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் தொடங்க உகந்த நாளாகும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். சேமிப்பு உயரும்.

meenam

மீனம்

இன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். வெளி வட்டார நட்பு சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். வருமானம் பெருகும்.

Next Story

இன்றைய ராசி பலன்-18.07.2024

Published on 18/07/2024 | Edited on 18/07/2024

 

Today rasi palan - 26.04.2024

இன்றைய  பஞ்சாங்கம்

18-07-2024, ஆடி 02, வியாழக்கிழமை, துவாதசி திதி இரவு 08.45 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. கேட்டை நட்சத்திரம் பின்இரவு 03.25 வரை பின்பு மூலம். பிரபலாரிஷ்ட யோகம்பின்இரவு 03.25 வரை பின்பு சித்தயோகம். கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். 

இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

இன்றைய ராசி பலன் - 18.07.2024

mesham

மேஷம்

இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. வெளியில் வாகனங்களில் செல்லும் பொழுது நிதானமாக செல்ல வேண்டும். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
 

reshabam

ரிஷபம்

இன்று உறவினர்கள் வழியில் குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். தொழிலில் இருந்த மந்த நிலை மாறி முன்னேற்றம் ஏற்படும். திடீர் பயணங்கள் செல்ல நேரிடும். எடுக்கும் முயற்சிகளுக்கு உடன் பிறந்தவர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். 
 

3

மிதுனம் 

இன்று உங்களுக்கு பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வேலையில் ஊதியம் உயர்வதற்கான வாய்ப்புகள் அமையும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு கிட்டும்.

kadagam

கடகம்

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படலாம். சிலருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் சற்று கவனமுடன் பழகுவது நல்லது. வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
 

5

சிம்மம்

இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். வேலை விஷயமாக செல்லும் வெளியூர் பயணங்களால் அலைச்சல் உண்டாகும். தொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் கவனம் தேவை. எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். வராத பழைய கடன்கள் வசூலாகும்.
 

kannirasi

கன்னி

இன்று பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் மேல் அதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவார்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வியாபார ரீதியாக பொருளாதார நிலை மேலோங்கும்.
 

thulam

துலாம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்க சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் தேவையில்லாத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் நம்பிக்கையை தரும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.
 

viruchagam

விருச்சிகம்

இன்று உறவினர்களின் திடீர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு திறமைக்கேற்ற பதவி உயர்வு கிட்டும். வருமானம் பெருகும். கடன் பிரச்சினை தீரும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும்.
 

danush

தனுசு

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் பெரியவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் தோன்றும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வியாபாரத்தில் இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.


magaram

மகரம்

இன்று குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராகும்.
 

kumbam

கும்பம்

இன்று நீங்கள் கடினமான காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.
 

meenam

மீனம்

இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் காலதாமதம் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். கடன்கள் சற்று குறையும். உறவினர்கள் மூலம் உதவி கிட்டும்.