மிதுனம்
இன்று உற்றார் உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும்.
கடகம்
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்ய நேரிடும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும், தொழில் ரீதியாக புதிய நட்பு உண்டாகும். பெரிய மனிதர்களின் உதவியால் எதிர்பார்த்திருந்த வங்கி கடன் கிடைக்கும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படும். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். உங்கள் ராசிக்கு பகல் 02.00 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. புதிய முயற்சிகளை மதியத்திற்கு பிறகு தொடங்கினால் அனுகூலப் பலன் ஏற்படும்.
கன்னி
இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். மற்றவர் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பது உத்தமம். உங்கள் ராசிக்கு பகல் 02.00 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. வெளியிடங்களில் பேசும் போது நிதானத்துடன் இருப்பது நல்லது.
துலாம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீக சொத்துகளால் நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியில் இருந்து வரவேண்டிய தொகை தடையின்றி வந்து சேரும்.
விருச்சிகம்
இன்று உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி கூடும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபாரத்தில் நற்பலன்களை தரும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் நல்ல மாற்றங்கள் உண்டாகும். வருமானம் பெருகும்.
தனுசு
இன்று உங்களுக்கு பண பற்றாக்குறையினால் குடும்பத்தில் நெருக்கடிகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்பு உண்டாகும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களில் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது.
மகரம்
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும். வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி வருமானம் பெருகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.
மீனம்
இன்று உத்தியோகத்தில் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகலாம். வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்பட்டாலும் எதிர்பார்த்த லாபம் கிட்டும். நண்பர்களின் உதவியால் பொருளாதார பிரச்சினைகள் சற்று குறையும்.