Skip to main content

இன்றைய ராசி பலன் - 05.05.2018

Published on 05/05/2018 | Edited on 05/05/2018

கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001

05.05.2018 சித்திரை 22, சனிக்கிழமை, பஞ்சமி திதி பகல் 01.22 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. பூராடம் நட்சத்திரம் பின்இரவு 01.33 வரை பின்பு உத்திராடம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 0. சனி ப்ரீதி நல்லது.

இராகு காலம் - காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
 

meshamமேஷம்

இன்று குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். வெளியூர் பயணங்களில் அனுகூலப் பலன்கள் ஏற்படும். சிலர் ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வார்கள். வேலையில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்லவும்.

reshabamரிஷபம்

இன்று நீங்கள் சோர்வுடனும் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் பொறுமையை கடை பிடிப்பது நல்லது. மற்றவர்கள் பிரச்சனையில் தலையிடாமல் இருப்பது உத்தமம். தொழில் ரீதியான புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

3மிதுனம்

இன்று குடும்பத்தில் அமைதி நிலவும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்களை வாங்க அனுகூலமான நாளாகும். உடன்பிறப்புக்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு திறமைகேற்ப பதவி உயர்வு கிட்டும். சிறப்பான வருமானத்தால் மகிழ்ச்சி ஏற்படும்.

kadagamகடகம்

இன்று உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். உற்றார் உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழில் சம்பந்தபட்ட வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும்.

 

5சிம்மம்

இன்று உடல்நிலையில் சற்று சோர்வு, சுறுசுறுப்பின்மை ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

kannirasiகன்னி

இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். நண்பர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை அளிக்கும். உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படும், கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். தெய்வ வழிபாடு நல்லது.

thulamதுலாம்

இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகமாகும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். கொடுத்த வாக்கை காப்பற்ற முடியும்.

 

viruchagamவிருச்சிகம்

இன்று உங்களுக்கு பணப்புழக்கம் சற்று குறைவாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத பிரச்சனைகள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண சிக்கலை தவிர்க்கலாம். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். 

danushதனுசு

இன்று தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் உண்டாகும். சுப முயற்சிகளில் முன்னேற்றங்கள் உண்டாகும். ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை குறையும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு அமையும்.

 

magaramமகரம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகள் வழியில் சிறுசிறு மனசங்கடங்கள் உண்டாகும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும்.

 

kumbamகும்பம்

இன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கடன் பிரச்சனை தீரும்.  

meenamமீனம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும். பொருளாதார தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும்.