கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ளது சேப்பாக்கம். இந்தக் கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவின், ஐந்தாம் நாள் விழாவில் அங்காளம்மன் சாமி வீதி உலா வரும்போது பக்தர் ஒருவர் அமர வைத்து அவரது தலையில், துணியால் தீவைத்து அதில் பொங்கல் வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
அந்தப் பொங்கல் வீதி உலா வரும் சாமிக்கு படையலாக படைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த பிரசாதத்தை வாங்கி சாப்பிடுகிறவர்கள் உடல் நலம் பூரண குணமடைவதாக பக்தர்கள் கூறுகின்றனர். இந்த வினோத திருவிழாவை காண பல்வேறு கிராமங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகிறார்கள்.