சீனாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ், தற்போது 190 நாடுகளுக்கு மேல் பரவி உலக அளவில் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. வல்லரசு நாடானா அமெரிக்கா உட்பட பொருளாதார ரீதியில் உயர்ந்த நிலையில் உள்ள அனைத்து நாடுகளும் இந்த வைரஸை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் திணறி வருகின்றன. இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழி சமூக விலகல் என்பதால் அனைத்து நாடுகளும் இதையே வலியுறுத்தி வருகின்றன. முன்னெச்சரிக்கையாக இந்தியா உட்பட பல நாடுகள் ஊரடங்கை அறிவித்துள்ளது.
இருந்த போதிலும் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகளவில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 1,50,000 தாண்டியுள்ளது. மேலும் உலகளவில் 22,26,941 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 5,63,670 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.