உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,81,165 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் உலகளவில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,70,370 ஆக உயர்ந்துள்ள நிலையில், குணமடைந்தோரின் எண்ணிக்கை 6,46,248 ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் புதியதாக 28,123 பேருக்கு கரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 7,92,759 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் ஸ்பெயினில் 2,00,210, இத்தாலியில் 1,81,228 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது. மேலும் பிரான்சில் 1,55,383, ஜெர்மனியில் 1,47,065, பிரிட்டனில் 1,24,743, சீனாவில் 82,747, துருக்கி 90,980, ஈரான் 83,505, பெல்ஜியம் 39,983, பிரேசில் 40,743, கனடாவில் 36,829, பாகிஸ்தானில் 8,892, மலேசியாவில் 5,425, சிங்கப்பூரில் 8,014, இலங்கையில் 304, சவுதி அரேபியாவில் 10,484, ஐக்கிய அரபு அமீரகத்தில் 7,265, கத்தாரில் 6,015 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் 42,514, ஸ்பெயினில் 20,852, இத்தாலியில் 24,114,பிரான்சில் 20,265, ஜெர்மனியில் 4,862, பிரிட்டனில் 16,509, சீனாவில் 4,632, துருக்கியில் 2,140, பெல்ஜியத்தில் 5,828, ஈரானில் 5,209, பிரேசிலில் 2,587, கனடாவில் 1,690, பாகிஸ்தானில் 178, மலேசியாவில் 89, சிங்கப்பூரில் 11, இலங்கையில் 7, சவுதி அரேபியாவில் 103, ஐக்கிய அரபு அமீரகம் 43, கத்தாரில் 9 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.