AREPIA

Advertisment

உலகிலேயே பெண்கள் வாகனங்கள்ஓட்ட தடை போட்ட ஒரே நாடாக பார்க்கப்பட்டுவந்த சவூதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டுவதற்கான தடை இன்று நீக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவில் பெண்கள் தங்கள் பெயரில் வங்கி கணக்கு ,பாஸ்போர்ட் என அனைத்திற்கு ஆண் பாதுகாவலரின் அனுமதி பெற வேண்டும் போன்ற பல நடவடிக்கைள் இருந்து வந்தது. அதேபோல் பெண்கள் வாகனங்களை இயக்கக்கூடாது அப்படி பெண்கள் வெளியே பயணம் மேற்கொள்ள வேண்டுமெனில் ஒருஓட்டுனரை நியமிப்பதுதான் ஒரே வழியாக இருந்து வந்தது.

Advertisment

அப்படி இருந்த சூழலில் சவூதி அரேபியாவை சேர்ந்த பெண்கள் மற்றும்பெண்களின்உரிமைதொடர்பான குரல் கொடுக்கும்அமைப்புகள் என எல்லோரும் ஒருமித்த கருத்தோடு பல ஆண்டுகள்பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கான உரிமைகளை வழங்க வேண்டிபோராடி வந்தன. அதன்பிறகு சவூதி அரசு பெண்கள் வாகனங்களை இயக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கடந்த ஆண்டுசெப்டெம்பர் மாதம் அறிவித்திருந்தது.

மேலும் கடந்த மாதம் முதல் முறையாக பெண்களுக்கு ஓட்டுநர் உரிமமும் சவூதி அரசுவழங்கியது. இதை தொடர்ந்து தற்போது இன்று முதல் பெண்கள் வாகனங்களை இயக்கலாம் அதற்கான தடை அகற்றப்பட்டுள்ளதுஎன அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது சவூதி அரசு.