Skip to main content

இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக அடக்குமுறை - அமெரிக்கா அறிக்கை

Published on 17/05/2023 | Edited on 17/05/2023

 

US reports oppression against Muslims in India

 

இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிராக அடக்குமுறை இருந்து வருவதாக அமெரிக்க அறிக்கை வெளியிட்டுள்ளது. 

 

சர்வதேச மத சுதந்திரம் என்ற தலைப்பில் கடந்த ஆண்டிற்கான அறிக்கையை அமெரிக்க வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்டிருந்தது. அதில், இந்தியாவில் உள்ள சில மாநிலங்களில் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்து அடக்குமுறை இருந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

அமெரிக்காவின் இந்த அறிக்கை பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில்,  இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும், இது குறித்து விளக்கமளித்த இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, “சரியான தகவல் மற்றும் புரிதல் இல்லாத காரணத்தால் அமெரிக்கா இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஒருதலைபட்சமாக கருத்துகள் சொல்லப்பட்டுள்ளதால் அந்த அறிக்கையின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

IND vs SA : கைவிடப்பட்ட முதல் டி - 20 போட்டி; ரசிகர்கள் ஏமாற்றம்

Published on 10/12/2023 | Edited on 11/12/2023
INd vs SA : First T-20 match abandoned; Fans are disappointed

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே மூன்று டி - 20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற இருந்தது. அதன்படி தென்னாப்பிரிக்காவின் டர்பனில் உள்ள ஹாலிவுட்பெட்ஸ் கிங்ஸ்மீட் கிரிக்கெட் மைதானத்தில் இன்று (10.12.2023) இந்தியா அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள இருந்தது. மூன்று டி - 20 போட்டிகள் கொண்ட தொடரில் இது முதல் போட்டியாகும்.

இந்த சூழலில் கிங்ஸ்மீட் மைதானத்தில் பெய்து வரும் மழையால் இந்தியா - தென்னாப்பிரிக்கா மோதும் முதல் டி20 போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டத்தின் ஓவர்கள் குறைக்கப்பட்டு நடத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில், இடைவிடாமல் பெய்த மழை காரணமாக, தென்னாப்பிரிக்கா - இந்தியா மோத இருந்த முதல் டி - 20 போட்டி ரத்து செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர்.

Next Story

IND VS AUS : இறுதிப் போட்டியில் இந்தியா அபார வெற்றி

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

 IND VS AUS : India won the final

 

இந்தியா - ஆஸ்திரேலியா அணிக்கு இடையேயான கடைசி மற்றும் 5வது டி20 போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மேத்யூ வேட் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

 

அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது. ஜெய்ஸ்வால் 21 ரன்களும் ருதுராஜ் 10 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். அடுத்தடுத்து வந்த சூரியகுமார் 5 ரன்களிலும், ரிங்கு சிங் 6 ரன்களிலும், ஜித்தேஷ் ஷர்மா 24 ரன்களிலும் அவுட் ஆனார்கள். அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 37 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். இவருடன் கூட்டணி சேர்ந்த அக்சர்பட்டேல் 21 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது.

 

இதனைத் தொடர்ந்து 161 ரன்கள் என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. ராவிஸ் ஹெட் 28 ரன்களும், ஜோஸ் பிலிப் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணி தோல்வியடைந்தது. முகேஷ் குமார் 3 விக்கெட்கள் கைப்பற்றினார். இதன்மூலம் 5வது மற்றும் கடைசி டி20 போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை இந்திய அணி வீழ்த்தியது. மேலும் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியுள்ளது.