US Kansas City Super Bowl parade incident

அமெரிக்காவில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியான சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் சீஃப்ஸ் சூப்பர் பவுல் என்னும் ரக்பி விளையாட்டு போட்டியின் வெற்றியை கொண்டாடும் விதமாக லட்சக்கணக்கான ரக்பி ரசிகர்கள் பேரணியாகசென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது இந்த பேரணியில் கலந்து கொண்ட ரக்பி ரசிகர்கள் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திடீரென சூப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 21 பேர் காயமடைந்துள்ளனர். பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரக்பி விளையாட்டு போட்டியின் வெற்றியை கொண்டாடும் விதமாக பேரணி சென்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது அமெரிக்காவில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.