ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நீண்டகாலமாகவே பிரச்சனை நிலவி வரும் நிலையில், தற்போது ரஷ்யா உக்ரைன் எல்லையில் படைகளை குவித்துள்ளது. இதனால் ரஷ்யா எந்த நேரமும் உக்ரைன் மீது படையெடுக்கும் என கருதப்படுகிறது. ஆனால்ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டமில்லை எனக் கூறி வருகிறது.ஆனால் இதனை நம்பாத அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள், உக்ரைனுக்கும், கிழக்கு ஐரோப்பாவிற்கும் அதிநவீன பாதுகாப்பு ஆயுதங்களையும், போர் கப்பல்களையும், போர் விமானங்களையும் அனுப்பியுள்ளன.
இதனால் போர் பதற்றம் அதிகரித்தது. இதற்கிடையேரஷ்யா உக்ரைன் எல்லையில் குவித்துள்ள படைகளைத் திரும்ப பெற, கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ கூட்டணி விரிவுபடுத்தப்படுவது தவிர்க்கப்படும், நேட்டோவில் உக்ரைனை சேர்க்கப்படாது என்பது போன்ற உத்தரவாதங்களை வலியுறுத்தியது. ஆனால் அதனைஏற்க மறுத்த அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும்பதற்றத்தைகுறைப்பது தொடர்பாக வேறு சில முன்மொழிவுகளைரஷ்யாவிடம் முன்வைத்தன.
இந்தநிலையில்நேற்று ரஷ்யா அதிபர் புதின், "அமெரிக்கா மற்றும் நேட்டோவின் முன்மொழிவுகளை கிரெம்ளின் ஆராய்ந்து வருகிறது. ஆனால் அந்தமுன்மொழிவுகள் போதுமானதாக இல்லை. ரஷ்யாவின் அடிப்படையான கவலைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன என்பது ஏற்கனவே தெளிவாக தெரிகிறது.வாஷிங்டனின் முதன்மையான அக்கறை உக்ரைனின் பாதுகாப்பில் இல்லை. அதன் முதன்மையான அக்கறை ரஷ்யாவை கட்டுப்படுத்துவதில் உள்ளது. அந்த இலக்கை அடைய உக்ரைன் ஒரு கருவியே. ஒருவித ஆயுத மோதலுக்கு நம்மை இழுத்து, ஐரோப்பாவில் உள்ள அவர்களது நட்பு நாடுகளின் உதவியுடன், அமெரிக்காவில் அவர்கள் இப்போது பேசிக்கொண்டிருக்கும் கடுமையான பொருளாதாரத் தடைகளை நமக்கு எதிராகவிதித்து ரஷ்யாவை கட்டுப்படுத்தலாம்" என தெரிவித்திருந்தார்.
இதன்காரணமாகபோர் பதற்றம் தணியுமாஎன்ற அச்சம் எழுந்தது. இந்தநிலையில்அமெரிக்கா, 3000 வீரர்களை கிழக்கு ஐரோப்பாவிற்கு அனுப்பியுள்ளது.ஜெர்மனியில் உள்ள 1,000 அமெரிக்க வீரர்கள் ருமேனியாவுக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும், அமெரிக்காவில் உள்ள 2000 அமெரிக்க வீரர்கள் ஜெர்மனிக்கும், போலாந்துக்கும்அனுப்பட்டு வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதற்கு ரஷ்யா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.ரஷ்ய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் அலெக்சாண்டர் க்ருஷ்கோ, இது அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடையேசமரசம் ஏற்படுவதை கடினமாக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் அவர், "இந்த அழிவுகரமான நடவடிக்கை "பதற்றத்தைஅதிகரிக்கும்" எனவும் "அரசியல் முடிவுக்கான வாய்ப்பைக் குறைக்கும்" எனவும்தெரிவித்துள்ளார்.