Skip to main content

"உரிமை உண்டு" -விவசாய போராட்டம் குறித்து ஐநா சபை கருத்து...

Published on 05/12/2020 | Edited on 05/12/2020

 

uno about farmers rally

 

 

ஜனநாயக ரீதியில் அமைதியாகப் போராட்டம் நடத்த மக்களுக்கு உரிமை உண்டு என இந்தியாவில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் குறித்து ஐ.நா. பொதுச்செயலாளரின் செய்தித்தொடர்பாளர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

 

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியின், 'புராரி' பகுதியில் அமைந்துள்ள மைதானத்திலும், டெல்லியின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளிலும் தொடர்ந்து பத்தாவது நாளாக விவசாயிகள் பெருமளவில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை மத்திய அரசுடன் நான்கு சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ள நிலையில், விவசாயிகளின் கோரிக்கைகள் ஏற்கப்படாததால் இந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. இந்நிலையில், இந்தியாவில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் குறித்து ஐ.நா. பொதுச்செயலாளரின் செய்தித்தொடர்பாளர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

 

ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபானே டுஜாரிக் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது இந்தியாவில் நடந்துவரும் விவசாயிகள் போராட்டம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "ஜனநாயக ரீதியில் அமைதியாக மக்கள் போராட்டம் நடத்த உரிமை இருக்கிறது. அதிகாரிகள் அதற்கு அவசியம் மக்களுக்கு அனுமதியளிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்