Skip to main content

அமெரிக்காவின் முதல் திருநங்கை மாநில செனட்டர்... தேர்தலில் வென்ற சாரா மேக்ப்ரைட்...

Published on 04/11/2020 | Edited on 04/11/2020

 

Sarah McBride elected as america's first transgender state senator

 

 

ஜனநாயக கட்சியின் சாரா மெக்ப்ரைட், டெலாவேர் மாகாணத்தில் வெற்றிபெற்று மாநில செனட்டராக பதவியேற்க உள்ளார். 

 

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். ட்ரம்ப்பை எதிர்த்து ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக ஜோ பைடன் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாக டெலாவேர் மாகாணத்தின் மாநில செனட்டர் பதவிக்காக சாரா மெக்ப்ரைட் என்ற திருநங்கை போட்டியிட்டார். இன்று வெளியான இதற்கான தேர்தல் முடிவுகளில் அவர் வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அமெரிக்காவில் மாநில செனட்டராக பதவியேற்கும் முதல் வெளிப்படையான திருநங்கை என சாரா மெக்ப்ரைட் என பெயர்பெற்றுள்ளார். அமெரிக்காவில் ஏற்கனவே திருநங்கைகள் சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கும் நிலையில், மாநில செனட்டர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் முதல் திருநங்கை இவரே ஆவார். 

 

 

சார்ந்த செய்திகள்