Skip to main content

இந்தியாவுக்கு ஆதரவாக வாக்களித்த பாகிஸ்தான்!

Published on 26/06/2019 | Edited on 26/06/2019

சர்வதேச நாடுகளில் நிலவும் விவகாரங்களில் இறுதி முடிவு எடுக்கும் முக்கிய அதிகாரம் பெற்ற அமைப்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை உள்ளது. இந்த அமைப்பில் வீட்டோ அதிகாரம் படைத்த வல்லரசு நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷியா ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக ஐநாவில் உள்ளன. 15 உறுப்பினர்களை கொண்ட இந்த அமைப்பில் ஓராண்டுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் தற்காலிக உறுப்பினர்களாக ஐந்து நாடுகளை தேர்வு செய்வது வழக்கம். 10 தற்காலிக உறுப்பினர்களில் 5 நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் வெளியேறி புதிய நாடுகள் இணைவது மரபாக இருந்து வருகிறது. புதிதாக இணையும் நாடுகள் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்த பதவியை வகிக்க முடியும்.

 

 

UNITED NATIONS

 

 

இந்நிலையில் வரும் 2021-22 ஆண்டில் ஆசிய-பசிபிக் நாடுகள் சார்பில் இந்த இடத்தை பிடிப்பதற்கு இந்தியா தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதற்கான தேர்தல் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு சபையில் சுழற்சிமுறை தற்காலிக உறுப்பினர் பதவியில் இந்தியா இடம் பிடிக்க பாகிஸ்தான் உள்ளிட்ட 55 ஆசிய-பசிபிக் நாடுகள் ஆதரவு தர முன் வந்துள்ளன. தேர்தலுக்கு முன்பே பாகிஸ்தான் இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து ஐநா சபையில் தற்காலிக உறுப்பினராக இடம் பெற ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூடான், சீனா, இந்தோனேசியா, ஈரான், ஜப்பான், குவைத், கிர்கிஸ்தான், மலேசியா, மாலத்தீவு, மியான்மர், நேபாளம், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, இலங்கை உள்ளிட்ட 55 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி சையத் அக்பருதீன்தெரிவித்துள்ளார்.

 

 


 

சார்ந்த செய்திகள்