Skip to main content

சம்பளம் தராத அமைச்சர்; சுட்டுக் கொலை செய்த காவலர்

Published on 03/05/2023 | Edited on 03/05/2023

 

uganda labour minister charles engalo incident

 

உகாண்டாவில் அதிபர் யோவேரி முசவேனி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது அமைச்சரவையில் தொழிலாளர் துறை அமைச்சராக இருந்து வந்தவர் சார்லஸ் எங்கோலா. மேலும் இவர் ஒரு ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஆவார்.

 

இந்நிலையில் அந்நாட்டின் தலைநகரான கம்பாலா  பகுதியில்  உள்ள அவரது வீட்டில் நேற்று காலை அமைச்சர் சார்லஸ் எங்கோலாவுக்கும் அவரது பாதுகாவலர் ஒருவருக்கும் இடையே வாக்குவாதம்  ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வாக்குவாதத்தால்  மேலும் ஆத்திரம் அடைந்த பாதுகாவலர் திடீரென தான்  வைத்திருந்த துப்பாக்கியால் அமைச்சரை சுட்டுள்ளார். அங்குத் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதும் பாதுகாப்புக்கு இருந்த மற்ற பாதுகாப்பு போலீசார் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அமைச்சர் சார்லஸ் எங்கோலா ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையே அமைச்சரைச் சுட்டுக் கொன்ற பாதுகாவலரும் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரிழந்ததாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கடந்த சில மாதங்களாகப் பாதுகாவலருக்குச் சம்பளம் வழங்கப்படாததால் இது குறித்து பாதுகாவலர் அமைச்சரிடம்  கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டு அவரை சுட்டுக் கொன்று இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளன. அமைச்சர் ஒருவர் தனது பாதுகாப்பாளர் ஒருவரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்நாட்டு மக்களிடையே  சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்