Published on 01/02/2019 | Edited on 01/02/2019
துருக்கியில் உள்ள பக்சிலர் பகுதியில் அரசு மாநகராட்சி அமைப்பு ஒன்று பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை கற்றுக்கொடுக்க புதிய பயிற்சி வகுப்பை ஒன்றை தொடங்கியுள்ளது. இரண்டு மாதம் நடைபெறும் இந்த வகுப்பில் பெண்கள் பொதுவெளியில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என கற்றுக் கொடுக்கப்படுகிறது. இந்த வகுப்பில் பெண்கள் ஐஸ் கிரீம் சாப்பிடும் போது அதனை நாக்கால் சாப்பிடக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடு துருக்கி நாட்டில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் சாப்பிடும் விஷயத்தில் எல்லாம் கட்டுப்பாடுகள் விதிப்பது பெண் சுதந்திரத்திற்கு எதிரான ஒன்று என இந்த கட்டுப்பாட்டிற்கு பலத்த எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. இதனைத் தற்போது சமூக ஊடகங்களில் அந்த நாட்டு பெண்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.