அமெரிக்க அரசின் முக்கிய ஆவணங்களை நாளேடுகள் பத்திரிகைகள் மற்றும் தனிப்பட்ட கடிதங்களுக்கு இடையே ஒளித்து வைத்துள்ளதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது எப்.பி.ஐ குற்றம் சாட்டியுள்ளது.
அதிபர் பதவியை இழந்து அதிபர் மாளிகையில் இருந்து வெளியேறும் போது அமெரிக்க அரசின் முக்கிய ஆவணங்களை ட்ரம்ப் எடுத்துச் சென்றதாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகிறது. அதில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ள எப்.பி.ஐ " டிரம்பின் புளோரிடா மாளிகையில் நடத்திய ஆய்வில் மொத்தமிருந்த15 பெட்டிகளில் 14 பெட்டிகள் கைப்பற்றப்பட்டது. அதில் அமெரிக்க அரசின் வெளியிடக்கூடாத ரகசிய ஆவணங்களை பத்திரிகைகள், கடிதங்கள் மற்றும் நாளேடுகளுக்கு இடையே மறைத்து வைக்கப்பட்டிருந்தது" என தெரிவித்துள்ளது.
14 பெட்டிகளில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் 184 ஆவணங்கள் வகைப்படுத்தப்பட்டது என்றும் 25 ஆவணங்கள் மிக ரகசியத் தன்மை கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.