திருச்சி சமயபுரம் அண்ணா நகரை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி தேன்மொழி மற்றும் குழந்தைகளோடு வாழ்ந்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் விஜய். இவர் ரவுடி பட்டியலில் இருக்கும் திருமணமானவர். ஆனந்த், விஜய் இருவரும் தற்போது பாதாள சாக்கடை திட்டத்தில் வேலை செய்து வருகின்றனர்.

l

இருவரும் நண்பர்கள் என்பதால் ஆனந்த் விஜய் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவாராம். 'அப்போது விஜயின் மனைவி மீது ஆனந்துக்கு ஆசை ஏற்பட்டது. எப்படியாவது அவளை அடைய வேண்டும் என எண்ணி அவரிடம் பலமுறை பேச்சுக் கொடுத்துள்ளார். ஆனந்தின் எண்ணத்தை அறிந்து கொண்ட விஜய் மனைவி அவரிடம் சரியாக பேசுவதில்லை. ஆனாலும் அவரை அடைந்தே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளார். ஒரு நாள் மாலை நேரம் வேலை முடிந்து வந்த விஜய்யும், ஆனந்தும் மது அருந்தியிருக்கிறார்கள்.

Advertisment

Advertisment

பின்னர் விஜய் வீட்டுக்கு வராமல் வெளியே சென்றுவிட்டார். இதை அறிந்த ஆனந்த் இதுதான் சரியான நேரம் என்று நினைத்து இரவு 11 மணிக்கு விஜய் இல்லாத நேரம் பார்த்து வீட்டுக்குள் போய் இருக்கிறான். அப்போது விஜய்யின் மனைவி கணவர் இல்லை என்று சொல்லி இருக்கிறார். இருப்பினும் ஆனந்த் வீட்டுக்குள் புகுந்து மனைவியை பலாத்காரம் செய்ய முயற்சி செய்திருக்கிறார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டனர். இந்த களேபரத்தில் ஆனந்த அதற்குள் தப்பி ஓடி விட்டார். நள்ளிரவு 12 மணியளவில் விஜய் வீட்டுக்கு வந்தபோது அவரது மனைவி, ஆனந்த் அத்துமீறி நடந்ததையும் அக்கம் பகக்கத்தில் உள்ளவர்கள் காப்பாற்றியதையும் சொல்லி அழுதுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த விஜய், ஆனந்தை தேடி அந்த நள்ளிரவில் அலைந்திருக்கிறார் . கடைசியாக அதிகாலை 4 மணியளவில் சமயபுரம் நால் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு படுத்திருந்த ஆனந்தை பார்த்ததும் ஆத்திரத்தில் அருகே இருந்த பெரிய பாறாங்கல்லை எடுத்து தலையில் போட்டுள்ளார். இதில் மண்டை உடைந்தது. அதன் பிறகும் ஆத்திரம் அடங்காத விஜய் மீண்டும் அதே பாரங்கல்லை எடுத்து போட, இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த ஆனந்த ஆனால் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர்.

தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்று ஆனந்த் உடலை கைப்பற்றி அரசு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். ஆனந்தை கொன்ற விஜய் தானாக சமயபுரம் காவல் நிலையத்தில் சரண் அடைந்து என் மனைவியை பாலத்காரம் செய்ய முயன்றதை கேள்விப்பட்டு ஆத்திரத்தில் கொன்று விட்டேன் என்று சொல்ல அதிர்ச்சியடைந்த போலிஸ் விஜயை கைது செய்து சிறையில் அடைத்தனர்.