உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 8 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 30க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மனிதர்கள் இதில் இருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள மாஸ்க், சானிடைசர் போன்றவற்றைப் பயன்படுத்தி வருகிறார்கள்.
பலரும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அவரவர்களுக்கு முடிந்த வகையில் முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் தாய்லாந்து மன்னர் வஜிராலங்கொர்ன் ஜெர்மனியில் உள்ள சொகுசு விடுதியில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அதுவும் தன்னுடைய மனைவி உள்ளிட்ட 20 பணிப்பெண்களுடன் அந்த ஹோட்டலில் அவர் தங்கியுள்ளார். மேலும் யாரும் அந்த விடுதியில் அறை எடுத்து தங்கக் கூடாது என்பதற்காக அந்த ஹோட்டல் முழுவதையும் அவர் புக் செய்துள்ளார்.