கச்சத்தீவு அந்தோணியார் தேவாலய திருவிழாவில் பங்கேற்க இந்தியர்களுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை மக்கள் இணைந்து ஆண்டுதோறும் கச்சதீவு அந்தோனியார் திருவிழாவை நடத்துவது வழக்கம். கடந்த ஆண்டுகளில் கரோனா காரணமாக கச்சத்தீவு திருவிழாவில் மக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. தற்பொழுது நடப்பாண்டில் மார்ச் மாதம் 11 மற்றும் 12 ஆம் தேதியில் திருவிழா நடைபெற இருக்கும் நிலையில், இந்த வருடம் மக்களை அனுமதிக்கலாமா வேண்டாமா என்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.
அதில் இலங்கையைச் சேர்ந்த 500 பேரை மட்டும் அனுமதிப்பது என அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. சென்ற வருடம் போல இந்த வருடமும் கரோனாவை காரணம் காட்டி தேவாலய திருவிழாவில் இந்தியர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவு திருவிழாவில் இந்தியர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது தமிழக மீனவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.