ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலிபான்கள், அங்கு தங்கள் இடைக்கால ஆட்சியை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று அவர்கள், அமெரிக்க ஆயுதங்களுடன் தங்கள் தலைநகர் காபூலில் இராணுவ வாகன அணிவகுப்பை நடத்தியுள்ளனர்.
புதியதாக பயிற்சி பெற்ற 250 வீரர்களுக்குப் பட்டம் பெற்றதையொட்டி, இந்த அணிவகுப்பு நடைபெற்றுள்ளது. காபூலின் முக்கிய சாலையில் நடைபெற்ற இந்த அணிவகுப்பில், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எம் 117 கவச வாகனங்கள் அணிவகுத்துச் சென்றுள்ளன. மேலும் இந்த அணி வகுப்பில் பங்கேற்ற பெரும்பாலான தலிபான் வீரர்கள், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எம்4 அசால்ட் ரைபிள்ஸை ஏந்தியிருந்தனர்.
இந்த ஆயுதங்களில் பெரும்பாலானவை, அமெரிக்காவில் இதற்கு முன்பிருந்த ஆப்கான் அரசின் இராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்டதாகும். மேலும் இந்த அணி வகுப்பில், ரஷ்ய தயாரிப்பான எம்ஐ-17 ஹெலிகாப்டர்களும் வானில் பறந்துள்ளன.