Skip to main content

தண்ணீருக்கு தட்டுப்பாடு... வறட்சி காரணமாக பொதுமக்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்கும் அரசு...

Published on 22/11/2019 | Edited on 22/11/2019

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நிலவும் கடும் வறட்சி காரணமாக ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக, விரைவில் அந்நாட்டு அரசு கடும் விதிமுறைகளை அமல்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

sydney water crisis

 

 

சிட்னி அணைகளில் 46 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ள நிலையில், நீர் இருப்பு 40 சதவீதத்தை விட குறையும் போது இந்த விதிமுறைகள் அமைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிட்னி நகர பகுதிகளில் கையிருப்பு உள்ள நீரின் அளவு குறைவாக உள்ளதால், எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகளின்படி, செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும்போதோ அல்லது வாகனங்களை கழுவும் போதும் நேரடியாக குழாய்கள் மூலம் தண்ணீரை பயன்படுத்தாமல் வாளியில் மட்டுமே பிடித்து பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நீச்சல் குளங்கள் போன்ற குளியல் அமைப்புகளுக்கு நீர் நிரப்ப ஒரு நாளைக்கு 15 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறும் தனி நபர்களுக்கு இந்திய மதிப்பில் ரூ.16,000 அபராதமும், தொழில் நிறுவனங்களுக்கு ரூ.40,000 வரையிலும் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 


 

சார்ந்த செய்திகள்