Skip to main content

நேட்டோ உடன் இணைகிறதா ஸ்வீடன்?

Published on 31/05/2023 | Edited on 31/05/2023

 

Is Sweden joining NATO?

 

உக்ரைன் - ரஷ்யா இடையே கடந்த பிப்ரவரி மாதம் முதல் போர் நிலவி வருகிறது. ரஷ்யா உக்ரைனில் தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தி முன்னேறி வரும் நிலையில், உக்ரைன் நாட்டு மக்கள் லட்சக்கணக்கானோர் அந்நாட்டை விட்டு வெளியேறினர். மேலும் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி தொடங்கிய இந்தப் போர் தொடர்ச்சியாக நீண்டு கொண்டே இருக்கிறது.

 

இதனிடையே ஸ்வீடன் நேட்டோ கூட்டமைப்புடன் இணைவதற்கான நேரம் வந்துவிட்டது என அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. ரஷ்யப் படைகள் உக்ரைனில் தொடர்ச்சியாக முன்னேறி வரும் சூழலில் ஸ்வீடன் மற்றும் அதன் அண்டை நாடான பின்லாந்து நேட்டோ கூட்டமைப்புடன் இணைவதற்கு விருப்பம் தெரிவித்தது. 

 

நேட்டோ எனும் வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு என்பது 1949 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதாகும். இதன்படி தங்களது கூட்டமைப்பில் உள்ள நாடுகளை பிற நாடு ஏதாவது தாக்குகையில் கூட்டமைப்பில் உள்ள நாடுகள் மொத்தமாகச் சேர்ந்து அந்த நாட்டை எதிர்க்கும். இந்நிலையில் ஸ்வீடன் மற்றும் பின்லாந்து நேட்டோ உடன் இணைவதற்கு விருப்பம் தெரிவித்த நிலையில் கடந்த மாதம் 31 ஆவது உறுப்பு நாடாக பின்லாந்து நேட்டோ உடன் இணைத்துக்கொள்ளப்பட்டது. ஆனால் ஸ்வீடன் இணைத்துக் கொள்ளப்படவில்லை. நேட்டோ கூட்டமைப்பில் உறுப்பு நாடாக இருக்கும் துருக்கி மற்றும் ஹங்கேரி போன்ற நாடுகள் ஸ்வீடன் இணைவதை விரும்பவில்லை. பயங்கரவாதக் குழுவாகக் கருதப்படும் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியின் உறுப்பினர்களுக்கு புகலிடமாக ஸ்வீடன் உள்ளது என்பது துருக்கியின் வாதம். 

 

இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரான ஆண்டனி ஃப்ளிங்டன் ஸ்வீடன் நேட்டோ கூட்டமைப்புடன் இணைவதற்கு இது சரியான நேரமாக இருக்கும் எனக் கூறியுள்ளார். செவ்வாய்க்கிழமை வடக்கு ஸ்வீடனில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆண்டனி ஃப்ளிங்டன், “அமெரிக்காவின் கண்ணோட்டத்தில், ஸ்வீடன் நேட்டோ உடன் இணைப்பதற்கு இறுதியான முடிவெடுக்க இது சரியான தருணம்” என்று கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

அதிபர் தேர்தலில் சிக்கல்?; டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக அதிரடி தீர்ப்பளித்த நீதிமன்றம்!

Published on 31/05/2024 | Edited on 31/05/2024
 Donald Trump was convicted by the court!

குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட்  ட்ரம்ப், அமெரிக்க அதிபராக கடந்த 2016 ஆம் ஆண்டு வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து நடந்த 2020 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனை எதிர்த்துப் போட்டியிட்டார். அந்த தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றார்.

இதையடுத்து, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனிடம் ஆட்சி பொறுப்பை வழங்குவதற்கு வழிவகை செய்யும் வெற்றிச் சான்றிதழ் அளிப்பு நிகழ்ச்சி நாடாளுமன்றத்தில் 2021 ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போது அந்த நிகழ்ச்சியை நடத்த விடாமல், டிரம்ப்பின் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகை முன்னால் நின்று கலவரத்தில் ஈடுபட்டனர். அவர்களை விரட்டியடிக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 4 பேர் பரிதாபமாக பலியாகினர். ஒட்டுமொத்த அமெரிக்காவையும் உலுக்கிய இந்த கலவரத்தில் டொனால்ட் ட்ரம்ப்புக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், அந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக டிரம்ப் பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகளும் எழுந்தன.

அதனைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகையை விட்டு டிரம்ப் வெளியேறிய பின்பு, அமெரிக்கா அரசின் ரகசிய ஆவணங்களை அவர் எடுத்துச் சென்றதாகக் குற்றச்சாட்டும் எழுந்தது. இது தொடர்பாக முன்னாள் அதிபர் டிரம்ப் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகின்றது. இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் உள்ள நீதிமன்றங்களில் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

அதே போல் டொனால்ட் ட்ரம்ப், நடிகை ஸ்டோமி டேனியல்ஸ் உடன் இருந்த உறவை மறைக்க 2016 தேர்தல் பிரச்சார நிதியில் இருந்து, அவருக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் டாலர் வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மான்ஹட்டன் கிராண்ட் ஜூரி, ட்ரம்ப் மீதான இந்த கிரிமினல் குற்றச்சாட்டை முன் வைத்தது. இவ்வழக்கில் ட்ரம்பிற்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் திடீரென அவருக்கு எதிராக சாட்சியளித்தார். தொடர்ந்து ட்ரம்ப் பணம் வழங்கியதற்கான ஆதாரத்தையும் அதிகாரிகள் கைப்பற்றினர். 

அதனைத் தொடர்ந்து, இது தொடர்பான வழக்கு  விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கின் பலகட்ட விசாரணைக்கு பின், டொனால்ட் டிரம்பு குற்றவாளி என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. இதையடுத்து, டொனால்ட் டிரம்புக்கு எதிராக 34 குற்றச்சாட்டுகளும் நிரூபணம் ஆனதால் ஜூலை 11ஆம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என நியூயார்க் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா அதிபராக இருந்த ஒருவர் குற்றவியல் வழக்கில் தண்டனை பெறுவது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது. இந்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் டிரம்ப் மீண்டும் போட்டியிட தயாராகி வரும் நிலையில், இந்த தீர்ப்பு அவருக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

Next Story

“அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பே மூன்றாம் உலகப்போர் தொடங்கும்” - ட்ரம்ப்

Published on 19/05/2024 | Edited on 19/05/2024
donald Trump said World War III will start before the US presidential election

அமெரிக்காவில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றார். நான்கு ஆண்டுகள் கொண்ட அமெரிக்க அதிபரின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது

இந்தாண்டு நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ட்ரம்ப், “நம்மிடம் திறமையற்றவர்கள் இருப்பதால் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பு உலகில் மூன்றாம் போர் தொடங்கும். தற்போது ஆயுத பலம் மிக பயங்கரமாக இருப்பதால் நம் நாட்டில் நிறைய பேர் எஞ்சியிருக்க மாட்டார்கள். முட்டாள்களை வைத்து நாம் இந்த நாட்டை நடத்தி வருகிறோம். நம் நாடு மிகவும் பலவீனமாக உள்ளது. மூன்றாம் உலக போரில்  விரைவில் முடிவடையும் நாடாக நமது அமெரிக்கா உள்ளது. ஏனென்றால் நம் நாட்டை வழிநடத்தும் முட்டாள்கள்தான் நம்மிடம் இருக்கிறார்கள்” என்றார்.