ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் நேற்று முன் தினம் (01-01-24) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம் ஹோன்சு பகுதி அருகே அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், வீடுகள் குலுங்கியதால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
3 மணி நேரத்தில் 30 முறை நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. இதில் 62 பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டன. மேலும் மத்திய ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கதை தொடர்ந்து ரஷ்யாவிலும், வடகொரியாவிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு திரும்பப் பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து தஜிகிஸ்தானிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 150 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டேர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியிருந்தது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று (03-01-24) நள்ளிரவு இரண்டு முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. ரிக்ட அளவில் 4.4 புள்ளிகளாகப் பதிவான முதல் நிலநடுக்கம் நள்ளிரவு 12:28 மணியளவில் பைசபாத்தில் இருந்து 126 கி.மீ கிழக்கு தொலைவில் 80 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. இதனால், வீடுகள் குலுங்கியதால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
அதனை தொடர்ந்து, நள்ளிரவு 12:55 மணியளவில் பைசபாத்தில் இருந்து 100 கி.மீ தென் கிழக்கு தொலைவில் 100 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. இந்த இரண்டாவது நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 அளவில் பதிவானது. அடுத்தடுத்து அரைமணி நேரத்திற்குள் ஏற்பட்ட இந்த இரண்டு நிலநடுக்கங்களால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகமல் இருக்கின்றது.