struggle in Maldives to get out of Gotabaya... Emergency declared in Sri Lanka

தொடர்ச்சியாக இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, எரிபொருள், உணவு போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு கடும் பஞ்சம் ஏற்பட்டு மக்களின் போராட்டம் நீடித்து வருகிறது. மக்களின் சீற்றத்திற்கு பயந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது மாளிகை விட்டு வெளியேறிவிட்டார். கோத்தபய அதிபர் பதவியை வரும் ஜூலை 13- ஆம் தேதிக்குள் ராஜினாமா செய்வதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் நாட்டை விட்டு கோத்தபய ராஜபக்சே தப்பி மாலத்தீவில் தஞ்சமடைந்ததாக தகவல்கள் வெளியானது.

Advertisment

இந்நிலையில் மாலத்தீவில் தஞ்சமடைந்துள்ள கோத்தபய ராஜபக்சேவை வெளியேற்ற வேண்டும் என மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் மாளிகையை முற்றுகையிட்ட புலம்பெயர்ந்த இலங்கை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் மறுபுறம் தற்பொழுது வரை மக்கள் போராட்டத்தை நீட்டித்து வருவதால் இலங்கையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவினை இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார். அமைதி நிலவ வேண்டும் என்பதற்கான தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக ரணில் ஏற்கனவே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.