Sri Lanka in trouble with foreign exchange!

இலங்கை நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அதைத் தவிர்க்க அந்நாடு இந்தியாவிடம் 3,700 கோடி ரூபாய் கடன் கோரியுள்ளது. கரோனா காரணமாக, சுற்றுலா மற்றும் ஏற்றுமதி தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், இலங்கை அரசு கடுமையான அந்நிய செலாவணி சிக்கலில் தவித்து வருகிறது.

Advertisment

வெளிநாடுகளில் இருந்து வாங்கும் அத்தியாவசியப் பொருட்களுக்கு கூட பணம் செலுத்துவதில் சிக்கல் உள்ளது. தற்போதைய நிலவரப்படி, வரும் ஜனவரி மாதம் வரை மட்டுமே பெட்ரோல், டீசலை வாங்கும் நிலையில் அந்நாட்டின் பொருளாதார நிலவரம் உள்ளது. இந்நிலையில், இப்பிரச்சனையை சரி செய்ய இந்தியாவிடம் 3,700 கோடி ரூபாய் கடனை இலங்கை கேட்டுள்ளது.

Advertisment

இந்த தகவலை இலங்கை பெட்ரோலியம் கார்பரேஷன் தலைவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் கோரிக்கையை இந்தியா ஏற்றுக்கொள்ளும் என்றும், விரைவில் இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.