sophia leone passed away

ஆபாச படங்களில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானவர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த சோபியா லியோன். 26 வயதான சோபியா லியோன், தனது 18வது வயதிலிருந்தே ஆபாச படங்களில் நடித்துவந்தார். இவர் அமெரிக்க மாடலிங் ஏஜென்ஸியான ‘101 மாடலிங் இங்க்’ நிறுவனத்தின் மூலம் அறிமுகமானா சில காலத்திலேயே பிக் ஸ்டாராக உருவெடுத்தார். படங்களில் நடிக்க தொடங்கிய 9 ஆண்டுகளில் அவரின் சொத்து மதிப்பு ஒரு பில்லியன் டாலராக உயர்ந்தது.

Advertisment

இந்த நிலையில், கடந்த 1 ஆம் தேதி நியூ மெக்சிகோவில் உள்ள அல்புகர்கி பகுதி அப்பார்ட்மெண்ட்டில் வசித்து வந்த சோபியா லியோனை அவரது குடும்பத்தினர் தொடர்புகொண்டனர். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியாததால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக சோபியா லியோன் தங்கிருந்த இடத்திற்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு மயக்கநிலையில் கிடந்த சோபியா லியோனை பார்த்து அதிர்ச்சியந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சோபியா லியோன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இது தொடர்பாக கடந்த 9 ஆம் தேதி நிதி திரட்டும் சமூக வலைதளமான ‘கோ ஃபன்ட் மீ’ வலைதளத்தில் சோபியா லியோன் வாளர்ப்பு தந்தை மைக் ரொமேரோ, “சோபியாவின் இறந்த செய்தியை நான் ஒரு கனத்த இதயத்துடன் பகிர்ந்து கொள்கிறேன். அவரின் இழப்பு எங்களுக்கும், அவரின் ரசிகர்களுக்கும் பேரிழப்பு..'' என பதிவிட்டுள்ளார். மேலும் அவரது இறுதி சடங்கிற்கு நிதி திரட்டும் அறிவிப்பையும் வெளியிட்டார். முதலில், சோபியாவின் இறுதி சடங்கிற்கு 12,000 டாலராக இலக்கு தொகை நிர்ணயிக்கப்பட்ட நிலையில், கூடுதலாக 5,725 டாலர் சேர்த்து உயர்த்தப்பட்டது.

இதனிடையே, நடிகையின் மரணம் குறித்து பேசிய அதிகாரி ஒருவர், “Albuquerque homicide detectives மூலம் நடிகையின் மரணம் பற்றி விசாரணை நடத்தி வருவதாகவும், நடிகை மரணத்தில் மர்மம் இருப்பதாகவும்” அந்நாட்டு ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். குடும்பத்தினர் தரப்பிலும் சோபியா லியோனின் மரணம் தற்கொலை இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. நடிகை இறப்பு செய்தி வெளியானதில் இருந்து அவருக்கு ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவர் கடைசியாக கொடுத்த பேட்டி மற்றும் நடித்த படங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே ரசிகர்கள் சிலர் சமூக வலைத்தளங்களில் சோபியாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், தீர விசாரணை செய்து உண்மையை கண்டுபிடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Advertisment

கடந்த 3 மாதங்களில் கேக்னே லின் தாய்னா ஃபீல்ட்ஸ்(24), கார்ட்டர்(36), ஜெஸ்ஸி ஜேன்(43) ஆகிய மூன்று ஆபாச பட நடிகைகள் அடுத்தடுத்து மரணம் அடைந்த நிலையில், தற்போது 4ஆவதாக சோபியா லியோன் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், தைனா ஃபீல்ட்ஸ் முன்னதாக ஆபாச திரைப்படத் துறையில் பாலியல் அத்துமீறல் நடப்பதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து அதிர்வலைகளை எழுப்பி இருந்தார். அதன் பிறகே அவர் மர்மமான முறையில் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் மூன்று பேரின் மரணத்திலும் சந்தேகம் இருப்பதாக ரசிகர்கள் குற்றம் சாட்டி வந்த நிலையில், தற்போது நடிகை சோபி லியோன் மரணம் அடைந்திருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.