boris johnson

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நேற்று (17.11.2021) ஆளுங்கட்சி எம்.பி.க்களின் முறைகேடு தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது. அதில் பிரிட்டனின் எதிர்க்கட்சித் தலைவர், ஆளுங்கட்சி எம்.பி.க்களின் முறைகேடு குற்றச்சாட்டுகளைப் பிரதமர் போரிஸ் ஜான்சன் கையாளும் விதம் குறித்து கடுமையாக விமர்சித்தார்.

Advertisment

அப்போது போரிஸ் ஜான்சன்குறுக்கிட்டு எதிர்க்கட்சித் தலைவரிடம் கேள்விகளை எழுப்ப முயன்றார். அப்போது குறுக்கிட்டநாடாளுமன்ற அவைத் தலைவர், "உட்காருங்கள்.. நீங்கள் இந்த நாட்டின் பிரதமராக இருக்கலாம். ஆனால்,இந்த அவையில் நான்தான் பொறுப்பில் இருக்கிறேன்" என அதிரடியாக தெரிவித்தார்.

Advertisment

தற்போது இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. அதேபோல் இந்த வீடியோவைப் பகிரும்இந்திய இணையவாசிகள், நம் நாட்டில் இதுபோன்றஒரு நிகழ்வு நடைபெறுமாஎன ஆச்சர்யம் தெரிவித்துவருகின்றனர்.

'Prime Minister sit down!' Speaker Sir Lindsay Hoyle clashes with Boris Johnson during PMQs - you don't see that very often pic.twitter.com/4SlQ0UJrZ4

Advertisment

— BenHurst (@BenHurst) November 17, 2021