உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் கூட கரோனா தாக்கம் அதிகளவு இருந்து வருகின்றது. உலகில் 20க்கும் மேற்பட்ட நாடுகள் கரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பதில் ஆர்வமாக இருந்து வருகின்றது. அந்த வகையில், ரஷ்யாவில் மனிதர்களுக்கு முதற்கட்ட கரோனா தடுப்பூசி சில தினங்களுக்கு முன் செலுத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்தப்பட்ட அனைவருக்கும் கரோனா வைரஸை எதிர்க்கும் சக்தி உருவானதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், அந்நாட்டின் தேசிய வைரஸ் ஆராய்ச்சி மையம் இன்று இரண்டாம் கட்டமாக மனிதர்களுக்கு மீண்டும் கரோனா தடுப்பூசியை செலுத்த உள்ளார்கள். இதற்கான அனுமதியை அரசிடம் அவர்கள் பெற்றுள்ளார்கள். முதற்கட்டமாக ரஷ்யாவில் மூன்று கோடி தடுப்பூசிகள் தயாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.