Skip to main content

ரணில் அரசுக்கு சஜித் பிரேமதாசா ஆதரவு!

Published on 16/05/2022 | Edited on 16/05/2022

 

Sajid Premadasa supports Ranil government!

 

இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. போராட்டத்தின் பலனாக ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். ஒட்டுமொத்த இலங்கையும் கலவரக் காடாக காட்சியளிக்கும் நிலையில், இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கே கடந்த 12 ஆம் தேதி பதவியேற்றார். இதேவேளையில் இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்புக்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சஜித் பிரேமதாசா ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதனால் பிரதமர் பதவியை தான் ஏற்க தயார் என சஜித் பிரேமதாசா கோத்தபய ராஜபக்சேவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

 

இந்நிலையில் தற்பொழுது ரணில் விக்ரமசிங்கே அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் சஜித் பிரேமதாசா. மக்களின் கொள்கைகளுக்கு எதிராக ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சி செயல்பட்டால் ஆதரவு திரும்பப் பெறப்படும். நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்கவே இந்த ஆதரவு எனவும் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்