Published on 22/05/2019 | Edited on 22/05/2019
கடந்த திங்கள்கிழமை அமெரிக்காவின் அலாஸ்கா மாகாண வான்பகுதியில் ரஷ்யாவின் 6 போர் விமானங்கள் அத்துமீறி பறந்ததாக அமெரிக்காவின் வான் பாதுகாப்பு கட்டளையகம் தெரிவித்துள்ளது.
அந்த 6 போர் விமானங்களும், குண்டு வீசும் திறன் கொண்ட டியூ-95 மற்றும் சுகோய் 35 ரகங்களை சேர்ந்தவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூறியுள்ள அமெரிக்க வான்பாதுகாப்பு கட்டளையகம், அமெரிக்க வான்பரப்பில் அத்துமீறி பறந்த 6 ரஷ்ய போர்விமானங்களை அமெரிக்காவின் எப்-22 விமானங்கள் மூலம் இடைமறித்து திருப்பி அனுப்பியதாக தெரிவித்துள்ளது. மேலும் ஆண்டின் 365 நாட்களும் அமெரிக்க படை விழிப்புடன் இருப்பதால் தங்கள் நாட்டின் உள்ளே யாரும் ஊடுருவ முடியாது எனவும் தெரிவித்துள்ளது.