Published on 12/10/2018 | Edited on 12/10/2018

கசகஸ்தான் நாட்டிலிருந்து ரஷ்யாவின் ராக்கெட் விண்வெளி வீரர்களுடம் நேற்று புறப்பட்டது. ராக்கெட் புறப்பட்டவுடன் திடீரென ராக்கெட் பூஸ்டர் பகுதியில் கோளாறு ஏற்பட்டதால் ராக்கெட் திசைமாறியது. உடனடியாக அதில் பயணம் செய்த விண்வெளி வீரர்கள் ராக்கெட்டிலுள்ள பேலிஸ்டிக் வாகனம் மூலம் பூமி நோக்கி திரும்பியுள்ளனர். பின்னர், விண்வெளி வீரர்கள் ஏவுகணை ஏவப்பட்ட இடத்திலிருந்து 450 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஜெசிஸ்கான் என்ற பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கப்படுகிறது. இதனை ரஷ்ய அதிபர் புதினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் உறுதிப்படுத்தி உள்ளார்.