'Rizz' chosen as the word of the year 2023...do you know what it means?

ஒவ்வொரு ஆண்டும் அந்தாண்டிற்கான சிறந்த ஆங்கில வார்த்தையை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகம் வெளியிடும். அந்த வகையில், 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த வார்த்தையாக ரிஸ் (Rizz) என்ற வார்த்தையை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகம் தேர்வு செய்து வெளியிட்டுள்ளது.

Advertisment

2023 ஆம் ஆண்டு மக்கள் மனநிலை ஆர்வம்மற்றும் அக்கறைகளை பிரதிபலிக்கும் வகையில், 8 சிறந்த வார்த்தைகள்தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்த 8 வார்த்தைகளில் சிறந்த வார்த்தையை முடிவு செய்வதற்கு ஆக்ஸ்போர்டு அகராதியியலாளர்கள் இடையே பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த வாக்கெடுப்பின் முடிவில், 2023 ஆம் ஆண்டின் சிறந்த வார்த்தையாக ரிஸ் (Rizz) என்ற வார்த்தை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

கடந்த 12 மாதங்களில் இந்த ரிஸ் (Rizz) என்ற வார்த்தை அதிக அளவு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என்று கூறப்படுகிறது. இந்த வார்த்தை, காதலை வெளிப்படுத்துதல் அல்லது கவர்ச்சிக்கான இணைய மொழியாக பெரும்பாலும் இளைஞர்களால் பயன்படுத்தப்படுகிறது.

ரிஸ் என்ற வார்த்தைக்கு ஆக்ஸ்போர்டு அகராதி விளக்கம்: ஸ்டைல், வசீகரம் அல்லது கவர்ச்சி; காதல் அல்லது பாலியல் இணையரை ஈர்க்கும் திறன். சுருக்கமாக, இது Charisma என்ற வார்த்தையின் மையப்பகுதி. ரிஸ் (to Rizz up) என்ற சொல்லை வினைச் சொல்லாகவும் பயன்படுத்தலாம்.