Skip to main content

வார்த்தைகளால் மோதிய தலிபான் தலைவர்கள் - கைகலப்பில் ஈடுபட்ட ஆதரவாளர்கள்!

Published on 15/09/2021 | Edited on 15/09/2021

 

abdul ghani baradar

 

ஆப்கானிஸ்தானில் தங்களது இடைக்கால அரசை நிறுவியுள்ள தலிபான்கள், முகமது ஹசன் அகுந்த்தை ஆப்கன் பிரதமராகவும், தங்கள் இயக்கத்தின் இணை நிறுவனர் முல்லா அப்துல் கனி பராதரை துணை பிரதமராகவும் அறிவித்தனர். இதற்கிடையே தலிபான்களுக்கும், தனி குழுவாக இருந்து பின்னர் தலிபான்களுடன் இணைந்த ஹக்கானி நெட்வொர்க்கிற்கும் அதிகார  மோதல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

 

இந்தநிலையில் முல்லா அப்துல் கனி பராதருக்கும், ஹக்கானி நெட்வொர்க்கிற்கும் மோதல் நடைபெற்றதாகவும், இதில் அவர் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால், இந்த தகவலை மறுத்த தலிபான்கள், தான் உயிரோடு இருப்பதாக அப்துல் கனி பராதரே ஆடியோ வெளியிட்டுள்ளார் என தெரிவித்ததோடு, அவர் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட வீடியோ ஒன்றையும் வெளியிட்டனர்.

 

இந்த சூழலில் அப்துல் கனி பராதருக்கும், ஹக்கானி நெட்வொர்க்கின் மூத்த தலைவர்களில் ஒருவரான கலீல்-உர்-ரஹ்மான் ஹக்கானிக்கும் கடந்த வாரம் வார்த்தை மோதல் நடைபெற்றதாக சர்வதேச ஊடகம் ஒன்றிடம் பேசிய தலிபான் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கலீல்-உர்-ரஹ்மான் ஹக்கானி, ஹக்கானி நெட்வொர்க்கின் நிறுவன தலைவரான ஜலாலுதீன் ஹக்கானியின் சகோதரராவார்.

 

தலிபான் அரசில்  முக்கிய பொறுப்புகளை வகிப்பது யார் என்பது தொடர்பாகவும், ஆப்கனைக் கைப்பற்றியதற்கு யார் காரணம் என்பது தொடர்பாகவும் இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் நடைபெற்றதாக தெரிவித்துள்ள தலிபான் வட்டாரங்கள், அப்துல் கனி பராதருக்கும் கலீல்-உர்-ரஹ்மானுக்கும் இடையே வார்த்தை மோதல் நடைபெற்றபோது இருவரின் ஆதரவாளர்களும் கைகலப்பில் ஈடுபட்டதாகவும், இதன்பிறகு அப்துல் கனி பராதர் காபூலைவிட்டு வெளியேறி காந்தகாருக்குச் சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளன.

 

இதற்கிடையே, அப்துல் கனி பராதர் தலிபான் உச்ச தலைவரை சந்திக்க காந்தகாருக்குச் சென்றதாக முதலில் கூறிய தலிபான் செய்தித்தொடர்பாளர், பின்னர் அவர் சோர்வாக இருப்பதாகவும் அவருக்கு ஓய்வு தேவைப்படுவதாகவும் தெரிவித்தார். இதனால் அப்துல் கனி பராதர் நிலை என்ன ஆனது என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆப்கானிஸ்தானின் முதல் கார்; மேட் ஆஃப் தாலிபன்ஸ்

Published on 12/01/2023 | Edited on 12/01/2023

 

Afghanistan's first car; made by Taliban

 

ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்துள்ள தலிபான்கள் அங்கு தங்களின் இடைக்கால அரசை நிறுவியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக பல்கலைக்கழகங்களில் பெண்கள் எந்த உடை அணிய வேண்டும் என்பதற்கு கட்டுப்பாடுகள் விதித்த தலிபான்கள் பெண் பத்திரிகையாளர்களுக்கும் பல கட்டுப்பாடுகளை விதித்தனர். இவ்வாறு தலிபான்கள் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்க தொடங்கியது உலக அளவில் மனித உரிமை ஆர்வலர்களிடையே கடும் கண்டனங்களைப் பெற்றது. 

 

தொடர்ந்து ஆப்கனில் தலிபான்கள் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வரும் நிலையில், தற்பொழுது முதல்முறையாக தாலிபான்களின் உத்தரவின் பேரில் நவீன கார் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. காபூலில் உள்ள 'ஆப்கானிஸ்தான் டெக்கினிக்கல் வெகேஷனல்' நிறுவனத்தில் 30 பேர் கொண்ட இன்ஜினியர் குழு இந்த காரை வடிவமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானால் தயாரிக்கப்பட்ட முதல் கார் இது என்பது குறிப்பிடத்தக்கது. காரை சுற்றி நின்று தலிபான்கள் பெருமை பேசிக்கொள்ளும் காட்சிகள், புகைப்படங்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

 

 

Next Story

நேரலையில் தனது சான்றிதழ்களைக் கிழித்தெறிந்த பேராசிரியர்; ஆப்கனில் பதற்றம் 

Published on 28/12/2022 | Edited on 04/01/2023

 

Live, the professor who tore up his certificates; Tension in Afghanistan

 

நேரலை நிகழ்ச்சியில் பேராசிரியர் ஒருவர் தனது சான்றிதழ்களை தானே கிழித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்கப் படைகள் மற்றும் நேட்டோ படைகள் வெளியேறின. இதனைத் தொடர்ந்து அந்நாட்டில் தாலிபன்கள் ஆட்சியைக் கைப்பற்றியது. ஆட்சியைக் கைப்பற்றியதும் இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின் படியே ஆட்சி நடைபெறும் என்று தாலிபன்கள் அறிவித்தனர். இதனால் தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை தாலிபன் அரசு மக்கள் மேல் விதித்தது.

 

குறிப்பாக, பெண்களுக்கு ஆடைக் கட்டுப்பாடுகளை விதித்தனர். தொடக்கக் கல்வியில் பெண்களுக்கு அனுமதி அளித்தும் மேல்நிலைக் கல்வியை மறுத்தனர். பொது இடங்களுக்கு ஆண்கள் துணையின்றி பெண்கள் தனியாகச் செல்வதற்கும் தடை விதித்தனர். தாலிபான்களின் செயலுக்கு உலகம் முழுவதில் இருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.

 

 

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் காபூல் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் கலந்து கொண்டார். நேரலையில் ஒளிபரப்பப்பட்ட அந்த விவாத நிகழ்ச்சியில் நெறியாளரும் பேராசிரியரும் தங்களது வாதங்களை முன்வைத்துப் பேசி வந்தனர். தொடர்ந்து பேசிய பேராசிரியர் தான் உடன் கொண்டு வந்திருந்த தனது டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு சான்றிதழ்களை நேரலையிலேயே கிழித்து தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.  

 

மேலும் பேசிய அவர், “எனது சகோதிரிகளுக்கு கல்வியில் இடம் இல்லை என்கிறபோது என்னால் மட்டும் எப்படி இந்தக் கல்வி முறையை ஏற்றுக்கொள்ள முடியும்” எனக் கூறினார். ஒரு பேராசிரியர் தனது சான்றிதழ்களை தானே கிழித்துப் போட்டது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.