Skip to main content

இலங்கையின் அதிபரானார் ரணில் விக்ரமசிங்கே!

Published on 20/07/2022 | Edited on 20/07/2022

 

 Ranil Wickramasinghe became the President of Sri Lanka!

 

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, எரிபொருள், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு கடும் பஞ்சம் ஏற்பட்டு போராட்டம் வெடித்துள்ளது. மக்களின் சீற்றத்திற்கு பயந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது மாளிகை விட்டு வெளியேறிவிட்டார்.

 

இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே இடைக்கால அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த நிலையில் இலங்கையில் இன்று அதிபருக்கான வாக்கெடுப்பு இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இந்த அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே, அழகப்பெரும,அனுரா திசாநாயக்க ஆகியோர் போட்டியிட்டனர்.

 

இதில் மொத்தமுள்ள 225 எம்பிக்களில் இரண்டு பேர் வாக்களிக்கவில்லை. மீதம் பதிவான 223 வாக்குகளில் 4 வாக்குகள் நிராகரிக்கப்பட்ட நிலையில் 134 ஆதரவு வாக்குகளுடன் ரணில் விக்ரமசிங்கே இலங்கையின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தப்பியோடிய கோத்தபய ராஜபக்சேவின் பதவி காலமான 2024 ஆண்டு நவம்பர் வரை ரணில் விக்ரமசிங்கேவின் இலங்கை அதிபர் பதவி தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்